
Pandian Stores 2 Today Episode : விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலானது நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே முத்துவேல் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைக்கு பிறகு என்ன நடந்தது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. அவர்களும் அதைப் பற்றி பெரிதாக கவலைப்பட்டதும் இல்லை.
இந்த சூழலில் இன்றைய 512ஆவது எபிசோடில் அரசி புத்திச்சாலித்தனமாக செயல்பட்ட சம்பவம் நடந்துள்ளது. தனக்கு புதிய ஆடை எடுக்க வேண்டும் என்று பெரிய மாமனாரிடம் அனுமதி கேட்டு குமரவேல் உடன் கடைக்கு வந்த அரசி அவரை ரொம்பவே கோபப்படுத்தினார். இதனால், ஆத்திரமடைந்த குமரவேல் வெளியில் காரில் இருப்பதாக சொல்லிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டு சென்றுவிட்டார். அங்கு, தனது அப்பா சக்திவேலுவிடம் அரசி என்ன எல்லாம் செய்தார் என்பதை வெளிப்படுத்தினார். தனது உடலில் சாம்பார் ஊற்றியது முதல் கொண்டு எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்.
பிறகு அப்பாவும் மகனும் சேர்ந்து கொண்டு பாண்டியனை பழிதீர்க்க திட்டமிடுகின்றனர். மேலும், அரசி கடையில் காசு இல்லாமல் வாங்கிய உடைகளுக்கு பில் கட்ட முடியாமல் அசிங்கப்பட வேண்டும் என்று குமரவேல் திட்டமிட்டார். ஆனால், அவர் திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை. இதைத் தொடர்ந்து கடைக்கு சென்றிருந்த அரசி தனக்கு தேவையான உடைகள் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டார். பிறகு பில் கவுண்டருக்கு சென்றிருந்தார்.
வெளியில் வெயிட் பண்ணுவதாக சொன்ன தனது கணவரை காணவில்லை. பிறகு வேறு வழியில்லாம எடுத்த எல்லா துணிகளுக்கும் பில் பேமண்ட் கட்டிவிட்டார். எப்படி கட்டினார் என்பது தான் இங்கு கேள்வி. ஏனென்றால் அவர் இப்போது தான் கல்லூரி படித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் வேலைக்கு செல்லவில்லை. இந்த சூழலில் அவரிடம் எப்படி காசு வந்தது என்ற கேள்வி எழுந்தது.
இதற்கு குமரவேல் பதிலளித்தார். எப்படி என்றால் அவரது மொபைலுக்கு அரசி வாங்கிய உடைகளுக்கு கார்டு மூலமாக பில் கட்டியதற்கான குறுஞ்செய்தி வந்துள்ளது. இதைப் பார்த்த குமரவேல் அதிர்ச்சி அடைந்தார். எதற்கு என்றால் பில் தொகை ரூ.17 ஆயிரம். மேலும் பர்ஸில் உள்ள தனது கார்டை சோதித்து பார்க்க அது இல்லை என்று தெரிய, பிறகு மெசேஜை பார்க்க அது அரசி எடுத்த ஜவுளி கடை என்று தெரிந்து பின்னர் கடைக்கு ஓடினார்.
அங்கு, கடைக்கு வெளியில் அரசி நின்று கொண்டிருந்தார். கையில் அவர் வாங்கிய எல்லா புது துணிகளையும் பையில் வைத்திருந்தார். இதைத் தொடர்ந்து கோபத்துடன் வந்த குமரவேலுவிடம் எப்படி போன உங்களை எப்படி திரும்ப வர வைத்தேன் என்று பார்த்தீர்களா என்றார். அதோடு கார்டு எடுத்தது பற்றியும், மொபைலில் பின் நம்பர் வைத்திருந்தது பற்றியும் தெரிந்து கொண்டார். அவர்களது சண்டை அங்கே நடந்தது.
இதைத் தொடர்ந்து தங்கமயிலுக்கு கோமதி சூஸ் போட்டு கொண்டு வந்தார். குழந்தை பிறந்த பிறகு வேலைக்கு செல்வது பற்றி மயில் மற்றும் கோமதி இருவரும் பேசிக் கொண்டனர். அதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.