
RJ Balaji Changed his Name : ஆர்.ஜே.வாக பணியாற்றி, பின்னர் தமிழ் சினிமாவில் காமெடியனாக கலக்கியவர் ஆர்.ஜே.பாலாஜி. நானும் ரெளடி தான் படத்தின் மூலம் இவரின் காமெடி காட்சிகள் வேறலெவல் ஹிட் ஆனதால், தொடர்ந்து காமெடி வேடங்களில் நடித்து வந்தார். இதையடுத்து எல்.கே.ஜி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படம் ஹிட் ஆனதை தொடர்ந்து, மூக்குத்தி அம்மன் என்கிற திரைப்படத்தை இயக்கினார். அப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்தார். அப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. பின்னர் வீட்ல விசேஷங்க என்கிற சூப்பர் ஹிட் படத்தை இயக்கினார்.
இந்த நிலையில், அவர் இயக்கத்தில் தற்போது பிரம்மாண்ட திரைப்படம் உருவாகி வருகிறது. அப்படத்தின் பெயர் கருப்பு. அதில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் சுவாசிகா, இந்திரன்ஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இப்படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஒன்றில் அய்யனார் பக்தனாகவும் மற்றொன்று வக்கீல் கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது.
கருப்பு படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி பிறந்தநாளன்று ரிலீஸ் ஆனது. அதில் நடிகர் சூர்யா கையில் அரிவாள் உடன் நிற்பது போன்ற போட்டோவும் இடம்பெற்று இருந்தன. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு சூர்யா நடிப்பில் ஏற்கனவே ரெட்ரோ திரைப்படம் வெளியான நிலையில், அவருக்கு இந்த வருடம் வெளியாகும் இரண்டாவது படமாக கருப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருப்பு படத்தின் போஸ்டரில் ஆர்.ஜே.பாலாஜியின் பெயர் ஆர்.ஜே.பி என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன்மூலம் அவர் தன்னுடைய பெயரை மாற்றி இருப்பது உறுதியாகி உள்ளது. அவரின் இந்த பெயர் மாற்றத்துக்கு காரணம், நடிகை ஊர்வசி தானாம். இதை ஆர்.ஜே.பாலாஜி ஒரு பேட்டியில் கூறி இருந்தார். மூன்றெழுத்தில் பெயர் உள்ளவர்கள் உச்சம் தொட்டிருக்கிறார்கள் என்று கூறிய ஊர்வசி, உனக்கு ஆர்.ஜே.பி என வைத்துக் கொள்ளுமாறு கூறினாராம். அவரின் பேச்சைக்கேட்டு தற்போது கருப்பு பட போஸ்டரில் தன்னுடைய பெயரை ஆர்.ஜே.பி என குறிப்பிட்டு இருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.