
பத்மாவதி படத்துக்கு வெளியிட ஐந்து மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தணிக்கை குழுவும் இதுவரை சான்று அளிக்கவில்லையாம்.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பத்மாவதி’.
இதை வியாகாம் 18 என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கூறி, பல்வேறு மாநிலங்களில் பிராமணர்களின் எதிர்ப்பு கிளம்பின.
இந்த நிலையில் மத்திய பிரதேசம், குஜராத், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் இந்தப் படத்தை வெளியிட தடை விதித்துள்ளன. மேலும், தணிக்கைக் குழுவும் இந்தப் படத்திற்கு சான்றளிக்கவில்லை.
இதனால், டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியாக இருந்த திரைப்படம், தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திரையிட அனுமதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
"பன்சாலி மற்றும் அவரது பத்மாவதி படக்குழுவினரை எங்கள் மாநிலத்தில் வரவேற்போம்" என்றும், "கருத்து சுதந்திரத்தை அழிக்க நினைக்கும் ஒரு அரசியல் கட்சியின் திட்டமிடப்பட்ட சதி" என்று, மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.