சூர்யா விஸ்கி... கார்த்தி காக்டைல் மிக்ஸ்... போஸ் வெங்கட்டின் மிக்சிங் பதில்!

Asianet News Tamil  
Published : Nov 24, 2017, 08:12 PM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
சூர்யா விஸ்கி... கார்த்தி காக்டைல் மிக்ஸ்... போஸ் வெங்கட்டின் மிக்சிங் பதில்!

சுருக்கம்

bosvenkat talk about surya and karthi

சின்னத்திரையில் சீரியல்களில் நடித்தான் மூலம் அனைவராலும் நன்கு அறியப்பட்டவர் நடிகர் போஸ்வெங்கட். இவர் தற்போது நடித்து வெளிவந்துள்ள 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைபடத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் அனைவர் மத்தியிலும் பாராட்டப்பட்டு வருகிறது.
போஸ்வெங்கட் படத்தைப் பற்றிச் சொல்லும் போது, ‘இந்த நேரத்தில் இயக்குநர் வினோத்துக்கும், நாயகன் கார்த்திக்கும் என்னுடைய நன்றிகள். சிவாஜி, தலைநகரம், சிங்கம், கோ, கவண் என்று பரவலாக கவனிக்கப்படும் நடிகராக நான் இருந்தாலும், தீரன் எனக்கு ஒரு தனி அடையாளத்தை தந்திருக்கிறது என்றார். 

தமிழ்நாடு அரசாங்கத்தின் அப்பாய்ட்மெண்ட் கொடுக்கப்படாத போலீஸ் நான். அந்த அளவுக்கு நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நான் போலீசாக நடித்திருக்கிறேன். அவை அனைத்திலிருந்தும் முற்றிலுமாக வேறுபட்டவன் தீரன் சத்யா. நிஜப் போலீசின் மேனரிசம், அவர்களது அன்றாட பிரச்சினைகள், குடும்பத்துடனான உறவு என்று இயல்பான போலீஸ்காரர் . இந்த கதாபத்திரத்தில் நடித்ததற்காக பலரும் தன்னை பாராட்டி வருகின்றனர். 

கார்த்தியுடன் இந்த படத்தில் நடித்தது  புது அனுபவமாக இருந்தது, நாக்கு வரலும் பாலைவனத்தில்... உதடுகள் வெடித்து காய்த்த போது  கூட அதை பற்றி சற்றும் யோசிக்காமல்  படத்தில் நடித்தவர் கார்த்தி. மேலும் சூர்யாவுடன் சிங்கம் படத்திலும் நடித்துள்ளேன் இருவரும் மிகவும் உச்சகமானவர்கள் என்று தெரிவித்தார்.

மேலும் சூர்யா விஸ்கி என்றால் ... கார்த்தி காக் டைல் மிக்ஸ்... போன்றவர் என்றும் ஆனால் இருவருக்கும் குடிக்கும் பழக்கம் கிடையாது என்று சிரித்தார். இந்த படத்தின் மூலம் தற்போது பிரபுசாலமன் இயக்கும் படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், மலையாளத்தில் ஒரு மெயின் வில்லன் கதாபத்திரத்தில் நடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Velpari: பாலிவுட் தயாரிப்பில் வேள்பாரி.! இந்திய திரையுலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் ஷங்கரின் அடுத்த மூவ்! ஹீரோ யார் தெரியுமா?
தனுஷ், சூர்யா, நயன்தாராவுக்கு தமிழக அரசு விருது.. அசுரன் முதல் கார்கி வரை.. விருதுகளை அள்ளிய படங்கள்! முழு லிஸ்ட்!