அன்பு மிகவும் அன்பானவர்..! என்னை டார்ச்சர் செய்யவில்லை... ! சர்ட்பிகேட் கொடுத்த தேவயானி!

 
Published : Nov 24, 2017, 07:43 PM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
அன்பு மிகவும் அன்பானவர்..! என்னை டார்ச்சர் செய்யவில்லை... ! சர்ட்பிகேட் கொடுத்த தேவயானி!

சுருக்கம்

anbuchezhiyan is not torcher me devayani open talk

சுப்ரமணியபுரம், தார தப்பட்டை ஆகிய படங்களுக்கு இணை தயாரிப்பாளராக இருந்தவர் அசோக் குமார். இவர் அன்புச்செழியன் என்கிற பைனான்சியரிடம் கந்து வட்டிக்கு வாங்கியதாகவும், அதனை உரிய நேரத்திற்குள் செலுத்தாமல் இருந்ததால், அன்புச் செழியன் அசோக் குமாரை மிரட்டியதால் அசோக் குமார் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் திரையுலகைச் சேர்ந்த பலர் இவரிடம் கந்து வட்டி பிரச்சனையில் சிக்கியதாகவும் தகவல்கள் வெளியாகின. அதில் அஜித், தேவயானி , ரம்பா போன்ற பல நடிகர்களும் அன்புவிடம் கந்து வட்டி பெற்றவர்கள் என ஒரு தகவல் வெளியானது.

இந்நிலையில் நடிகை தேவயானி, ஒரு பேட்டி கொடுத்துள்ளார் அதில், அன்புச்செழியனிடம் கடன் பெற்றது உண்மை தான். ஆனால் நான் என் படத்தை முடிக்கும் போது  தான் அவரைச் சந்தித்தேன். அவர் இதுவரை தன்னை எந்தக் கொடுமையும் செய்ததில்லை நான் பார்த்தவரை அன்பு மிகவும் அன்பான மனிதர் என தேவயானி சர்ட்டிபிகேட் கொடுத்துள்ளார். 

அதேபோல் அவர் என்னையும் என் கணவரையும் கொடுமைப்படுதினார் என்று பரவும் தகவல் பொய் என்று விளக்கம் கொடுத்தார். முதலில் அன்புவிற்கு எதிராக ஒரு சிலர் கருத்துக்  கூறி வந்த நிலையில் தற்போது பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!
கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்