குடியால் கெட்ட குடித்தனம்...! சோனியா அகர்வாலின் சோகம் நிறைந்த  வாழ்க்கை..!

 
Published : Nov 24, 2017, 06:09 PM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
குடியால் கெட்ட குடித்தனம்...! சோனியா அகர்வாலின் சோகம் நிறைந்த  வாழ்க்கை..!

சுருக்கம்

soniya agarwal sad life

நடிகை சோனியா அகர்வால் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய 'காதல் கொண்டேன்' படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இதைத் தொடர்ந்து இவர் நடித்த '7 g ரெயின்போ காலனி ' 'திருட்டுப் பயலே' போன்ற படங்கள் இவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்த இவர்... குடிப் பழக்கத்தின் காரணமாக சினிமா துறையில் பல சர்ச்சைகளை சந்தித்து படங்களின் வாய்ப்பை இழந்தார். பின் அவருடைய முதல் தமிழ்ப் படத்தை இயக்கிய செல்வராகவனையே காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

ஆனால் இவருடைய திருமண வாழ்க்கை சில வருடங்கள் மட்டுமே நீடித்தது, 2006ஆம் ஆண்டு செல்வராகவனை திருமணம் செய்துகொண்டு 2010 ஆம் வருடம் செல்வராகவனிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். இந்த விவாகரத்து குறித்து செல்வராகவனின் தந்தை கஸ்தூரி ராஜா கூறுகையில், சோனியா அகர்வால் தினமும் குடித்துவிட்டு என்னுடைய மகனிடம் சண்டை போட்டு வருவதால்.. மன உளைச்சல் காரணமாக செல்வராகவன் விவாகரத்து முடிவிற்கு வந்துவிட்டான் என்று  தெரிவித்தார்.

செல்வராகவனிடம், விவாகரத்து பெற்றதற்கு பின் ஒரு சில படங்களில் நடித்த இவர், சின்னத்திரையிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார். தற்போது அவருடைய சொந்த ஊரான சண்டிகர் மாநிலத்தில் பெற்றோர்களுடன் வசித்து வருவதாக தெரிகிறது. 

சமீபத்தில் கூட இவருக்கு... நடிகர் தனுஷ் பல்வேறு உதவிகள் செய்து வருவதாகக் கூறப்பட்டது. முன்னணி நடிகையாக இருக்க வேண்டிய இந்த நடிகையின் வாழ்க்கையே தற்போது குடியின் காரணமாக சின்னாபின்னமாகியுள்ளது.  இதுபோல் சினிமாவில் நட்சத்திரங்கள் சிலர் தங்களது வாழ்க்கையை மது மயக்கத்திற்கு தாரை வார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!