
தென்னிந்திய நடிகர் சங்க வட்டாரம் செம்ம்ம்ம்மமம சந்தோஷத்தில் இருக்கிறது.
ஏன்?
ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் போல் கர்ணசிரத்தையான மாஸ் ஹீரோக்களை பார்ப்பது அபூர்வம். உடம்பில் எங்கு அடிபட்டு ரத்தம் ஒழுகினாலும், ஒரு கட்டுப்போட்டுவிட்டு ‘நான் ரெடி சார்!’ என்று நிற்கும் தயாரிப்பு நிறுவனத்துக்காக வந்து நிற்கும் டெடிகேடட் ஊழியர். கேட்டால் ‘நம்மள நம்பி கோடிகளை போடுறாங்க. நம்மால ஒரு குறையும் வரக்கூடாது.’ என்பார்.
ஆனால் அதே அஜித்தான் தன் படத்துக்கான ப்ரமோஷன் பணிகளுக்காக சிறு துரும்பைக் கூட கிள்ள்ப்போட மாட்டார். அது எம்மாம் பெரிய பேனராக இருந்தாலும் இதுதான் நிலை.
ஆனால் விஜய் அப்படியில்லை. ஷூட்டிங்கில் தன் வசதிக்காக நேக்கு போக்காக நடந்து கொள்பவர் ப்ரமோஷனுக்காக பேட்டிகளை கொடுக்க தயங்காதவர்.
இதேபோல்தான் ஸ்டார் ஷோ, விருது விழாக்களிலும் தல தலைகாட்டவே மாட்டார். ‘உங்களுக்கு ஆஸ்கார் கொடுக்குறோம். வாங்க பாஸ்’ அப்படின்னாலும், என் ரசிகனோட கைதட்டலே எனக்கு ஆயிரம் ஆஸ்காருக்கு சமம்! என்று சுருக்கமாய் மறுத்துவிடுவார். ஆனால் இதிலும் விஜய் நேர் எதிரிடை அஜித்துக்கு.
அஜித்தை ஸ்டார் ஷோக்களில் கொண்டு வந்து நிறுத்த முயன்று தோற்றுப் போன திரையுலக பெரும் பி.ஆர்.ஓ.க்கள், நிறுவனங்கள், இயக்குநர்கள் மிக அதிகம்.
ஆனால் விஷாலோ இதை பிரேக் செய்ய முயன்று சற்றே ஜெயித்திருக்கிறாராம்.
யெஸ்! அடுத்த மாதம் மலேஷியாவில் ‘ஸ்டார் நைட்’ நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் அஜித்தை மேடையேற்றியே தீருவது எனும் ஒன்லைன் டார்கெட்டுடன் மூவ் செய்திருக்கிறார் விஷால். தொடர் முயற்சி, சில சந்திப்புகள், தொடர் போன்கால்கள், சினியுலக வாழ்க்கைக்கான செண்டிமெண்ட் பேச்சுகள் மூலம் அஜித்தை கிட்டத்தட்ட சம்மதிக்க வைத்துவிட்டாராம். சமீபத்தில் இதற்காக விஷால் பேசியபோது ‘கூடிய சீக்கிரம் சொல்றேன்!’ என்றிருக்கிறாராம் அஜித். இதில் விஷாலுக்கு ஏக சந்தோஷமாம்.
தலயை மலேஷியாவின் ஸ்டார் நைட்டில் மேடையேற்றும் போது, தனி ஆவர்த்தனம் செய்துவிட்டு பின் விஜய்யையும் அதில் தோன்ற வைத்து, இருவரையும் ஒரே மேடையில் ஒன்றாக நிறுத்துவதுதான் விஷால் போட்டிருக்கும் ஸ்கெட்ச். இதைச் சொல்லிதான் அந்த ஸ்டார் ஷோவின் கமர்ஷியல் கேன்வாஸை பிரம்மாண்டமாக்கி இருக்கிறார் அவர் என்கிறார்கள்.
இருவரையும் ஏதாவது பர்ஃபார்ம் பண்ண வைக்கலாமென்றால், ஆடச்சொன்னால்! விஜய் தயங்க மாட்டார். ஆனால் அஜித்திடம் சான்ஸே இல்லை. அதனால் இருவரும் சேர்ந்து ஏதாவது சில நிமிடங்கள் நட்பாக பேசினாலே அந்த ஷோ மரண மாஸாக ஹிட்டடிக்கும் என்று விஷாலும், கார்த்தியும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
இது நடந்தால் நடிகர் சங்க நிர்வாகியாக தனது கேரியரில் மிகப்பெரிய சாதனை இது என்று தன் சகாக்களிடம் குதூகலிக்கிறாராம் விஷால்.
சகாக்களோ ‘தல ஆட வேண்டாம், பேச கூட வேண்டாம். அவரு ஸ்டேஜ்ல வந்து நின்னு ரெண்டு ஸ்டெப் நடந்தா கூட போதும்! மலேஷியாவுல பூகம்பமே வர்ற அளவுக்கு ரசிகர்கள் வெறியா ஆர்ப்பரிச்சு கொண்டாடிடுவாங்களே!’ என்று சொல்ல, அப்படியே ஆமோதித்திருக்கிறார் விஷால்.
ஓ.கே. சொல்வாரா தல? விஷாலின் ஆசை நிறைவேறக்கடவதாக!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.