ஆர்யாவுக்கு போட்டி போடும் பெண்கள்... எத்தனை பேர் தெரியுமா?

 
Published : Nov 24, 2017, 02:48 PM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
ஆர்யாவுக்கு போட்டி போடும் பெண்கள்... எத்தனை பேர் தெரியுமா?

சுருக்கம்

more girls intrested to marry actor ariya

நடிகர் ஆர்யா கோலிவுட் திரையுலகின் ப்ளே பாய் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்டவர். இவர் பல நடிகைகளுடன் ஜாலியாக திரிந்து வந்ததால் தான் படங்களில் சரியாக கவனம் செலுத்தவில்லை என்று கூட கிசுகிசுக்கள் எழுந்தன.

மேலும் சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த படங்கள் இவருக்கு பெரிதாக வெற்றியை கொடுக்கவில்லை, அதே போல் இவர் கமிட் ஆகி இருந்த சங்கமித்ரா திரைப்படமும் சில காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது இவர் கைவசம் உள்ளது சந்தனதேவன் என்கிற படம் மட்டுமே.

35 வயதைக்கடந்தும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் இவர் கடந்த சில தினங்களுக்கு முன் தான் திருமணம் செய்துகொள்ள ஒரு பெண் வேண்டும் என அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை  வெளியிட்டார். இதில் நான் உங்களுக்கு நல்ல லைப் பாட்னராக இருப்பேன் என்று உங்களுக்குத் தோன்றினால் இந்த எண்ணுக்கு  போன் செய்யவும் என்று கூறி ஒரு தொலைபேசி எண்ணை  வெளியிட்டார்.

அதற்குப் பின் பலர் இந்த எண்ணுக்கு கால் செய்தபோது, அவர்களுடைய மொபைல் எண்ணுக்கு ஒரு மெசேஜ் வரும் என்றும் அதில் உள்ள லிங்கை கிளிக் செய்து, அவர்களுடைய முழு விவரத்தையும் அதில் குறிப்பிட்டால் நான் விரைவில் நேரில் சந்திப்பேன் என்றும் கூறி இருப்பார்.

இவரின் இந்தப் பேச்சைப் பார்த்த பெண்கள் பலர் ஆர்யாவை திருமணம் செய்ய போட்டி  போட்டுக்கொண்டு போன் செய்துள்ளார்களாம். மேலும் ஆரியாவை டெஸ்ட் செய்ய ஆண்களும் கூட போன் செய்துள்ளார்களாம். இப்படி, இதுவரை ஆரியாவிற்கு  லட்சத்துக்கும் மேல் போன் செய்துள்ளனராம். ஆனால், சிலரிடம் மட்டும் இருந்து தான் முழு விவரம் ஆர்யா விற்கு சென்றுள்ளதாகவும். விரைவில் ஆர்யா அவர்களை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அஞ்சானை அரெஸ்ட் பண்ண உத்தரவா? கைது நடவடிக்கை பற்றி உண்மையை போட்டுடைத்த லிங்குசாமி
நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!