நடிகைகள் தினமும் புருஷனை மாற்றுகிறவர்கள்... பாஜக எம்.எல்.ஏ  பேச்சால் சர்ச்சை!

 
Published : Nov 24, 2017, 02:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
நடிகைகள் தினமும் புருஷனை மாற்றுகிறவர்கள்... பாஜக எம்.எல்.ஏ  பேச்சால் சர்ச்சை!

சுருக்கம்

bjp mla controversy talk

இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியாகத் தயாராக இருக்கும் திரைப்படம், 'பத்மாவதி' ஆனால் இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் ஒரு சில அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவிப்பதோடு நடிகை தீபிகா படுகோன் மற்றும் இயக்குனர் தலைக்கு பேரம் பேசி வருகின்றனர்.

காரணம் இந்தப்படத்தில் ராணி பத்மாவதியை தவறாக சித்திரித்துள்ளதாகவும், வரலாற்றுக்கதையையே மாற்றி இயக்குனர் படம் எடுத்துள்ளதாகவும் கூறப் படுகிறது. 

இந்நிலையில் ஒரு விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஹைதராபாத் பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங்,  எல்லை மீறி நடிகைகள் தினம்தோறும் புருஷனையே மாற்றுகிறார்கள் எனப் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே  "பத்மாவதி படம் வரலாற்றை திரித்து எடுக்கப்பட்ட படம், அதை தெல ங்கானாவில் வெளியிட்டால் தியேட்டர்களை தீயிட்டு கொளுத்துவோம்" என ராஜா சிங் சில நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கதிரை அடிக்க பாய்ந்த ஞானம்.. எதிரிகளாக மாறும் தம்பிகள்; தடாலடி முடிவெடுத்த குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது
மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார் - அவர் இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளாரா?