அமேசானுக்கு அடுத்து நெட்பிளிக்ஸ்.. அடுத்த ஆந்தாலஜி படத்திற்காக ஒன்று கூடிய முன்னணி இயக்குநர்கள்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Oct 01, 2020, 08:25 PM IST
அமேசானுக்கு அடுத்து நெட்பிளிக்ஸ்.. அடுத்த ஆந்தாலஜி படத்திற்காக ஒன்று கூடிய முன்னணி இயக்குநர்கள்...!

சுருக்கம்

பாவக்கதைகள் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆந்தாலஜி படத்தில் அஞ்சலி, சாய் பல்லவி, சிம்ரன், பிரகாஷ் ராஜ், காளிதாஸ் ஜெயராம், சாந்தனு உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.   

சுதா கொங்கரா, கவுதம் மேனன், சுஹாசினி மணி ரத்னம், ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகிய ஐந்து இயக்குநர்கள் இணைந்து ‘புத்தம் புது காலை’ என்ற தலைப்பில் ஆந்தாலஜி படம் ஒன்றை இயக்கியுள்ளனர். ஐந்து குறும்படங்களின் தொகுப்பாக உருவாகியுள்ள 'புத்தம் புது காலை' திரைப்படம் அக்டோபர் மாதம் 16ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் ‘இளமை இதோ இதோ’ கதையில் காளிதாஸ் ஜெயராம், ஊர்வசி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்துள்ளனர். கெளதம் மேனன் இயக்கியுள்ள ‘அவரும் நானும் - அவளும் நானும்’ எம்.எஸ்.பாஸ்கர், ரீத்து வர்மா ஆகியோர் நடித்துள்ளனர். பிரபல இயக்குநர் மணிரத்னத்தின் மனைவியும், நடிகையுமான சுஹாசினி இயக்கியுள்ள‘காஃபி, எனி ஒன்?’ குறும்படத்தில் அவருடன் அனு ஹாசன், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். ‘ரீயூனியன்’ குறும்படத்தை ராஜீவ் மேனன் இயக்கியுள்ளார். ஆண்டிரியா லீலா சாம்சன், சிக்கில் குருச்சரன் ஆகியோர் நடித்துள்ளனர். சுப்புராஜ் இயக்கியுள்ள‘மிராக்கிள்’ குறும்படத்தில்  இதில், பாபி சிம்ஹா, முத்துக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படி 5 கதைகளையும் சேர்த்து ஒரு படமாக இது வெளியாக உள்ளது. 

இதேபோல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிடுவதற்காகவும் ஆந்தாலஜி படம் ஒன்று தயாராக உள்ளது. ரோனி ஸ்க்ரூவலாவின் ஆஎஸ்விபி மூவிஸ் நிறுவனமும், பிளையிங் யுனிகார்ன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ள இந்த படத்தை நெட்பிளிக்ஸ் 190 நாடுகளில் வெளியிடுகிறது. காதல், அந்தஸ்து, கவுரம் ஆகியவை உறவுகளுக்கிடையே ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்த 4 அழகான கதைகள் கெளதம் வாசுதேவ் மேனன், சுதா கொங்கரா, வெற்றி மாறன், விக்னேஷ் சிவன் ஆகியோர் இயக்க உள்ளனர். 

 

இதையும் படிங்க: ஆடையில்லாமல் போட்டோ ஷூட் நடத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்... வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி...!

பாவக்கதைகள் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆந்தாலஜி படத்தில் அஞ்சலி, சாய் பல்லவி, சிம்ரன், பிரகாஷ் ராஜ், காளிதாஸ் ஜெயராம், சாந்தனு உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாடி ஷேமிங்கால் தற்கொ*லை செய்பவர்கள் முட்டாள்கள்... கூலி பட நடிகை ரச்சிதா ராம் சாடல்
Krithi Shetty : ப்பா.. பாக்க பாக்க கண்கள் கூசுதே! ஹாட் உடையில் கீர்த்தி ஷெட்டி.. வைரலாகும் போட்டோஸ்!