
2020ம் ஆண்டின் தொடக்கம் முதலே பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல்வேறு பிரபலங்களின் மரணங்கள் ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. கடந்த வாரம் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார். ஓட்டுமொத்த திரையுலகை உலுக்கியது. அந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள் பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மரணமடைந்தை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ், சாயா சிங் நடிப்பில் வெளியான திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், சிம்பு, ஜோதிகா நடித்த மன்மதன், துஷ்யந்தின் மச்சி, விக்ரம், சினேகா நடிப்பில் வெளியான கிங் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் கிருஷ்ணகாந்த். அதில் தனுஷிற்கு திருடா திருடி, சிம்புவிற்கு மன்மதன் ஆகிய திரைப்படங்கள் அவர்களுடைய கேரியருக்கு முக்கிய திருப்பமாக அமைந்த திரைப்படங்கள். வசூல் ரீதியாகவும் இரு படங்களும் சூப்பர் ஹிட்டானது.
இதுபோன்று பல படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவுக்கு 10.45 மணிக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டு தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது. "நல்ல மனிதர்களை இழந்து வருகிறோம். "மன்மதன்" படம் என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவங்களைக் கொண்டது.
என் மீது மிகுந்த அன்பு கொண்டவர் திரு. கிருஷ்ணகாந்த் அவர்கள். "மன்மதன்" படத்தை என் மீது நம்பிக்கை வைத்து இயக்கச் சொன்னவர். நீங்க ஸ்கிரிப்ட் பண்ணுங்க. இயக்குங்க என உற்சாகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையில் என் மீது மிகுந்த எதிர்பார்ப்பைக் கொண்ட நல்ல மனிதர். அவரது மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கலங்க வைக்கிறது. அவரது இழப்பினால் வாடும் குடும்பத்தினருக்கு
ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவன் மடியில் அந்த நல்ல ஆத்மா அமைதி கொள்ளட்டும். என சிம்பு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.