பொருந்தாத ஆவணங்கள்... புரளி கிளப்பும் கஸ்தூரி... விஜய் டிவியின் தெளிவான விளக்கம்..!

By Kanimozhi PannerselvamFirst Published Oct 1, 2020, 5:11 PM IST
Highlights

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே அவருக்கு செலுத்தப்பட்டாலும், அவருடைய ஜிஎஸ்டி ஆவணங்கள் பொருந்தாததால் அதற்கான கட்டணங்கள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை கஸ்தூரியும் ஒரு போட்டியாளராக பங்கேற்றார். தற்போது சீசன் 4-க்கான தொடக்க வேலைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், கடந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கான சம்பளம் தனக்கு வரவில்லை என ட்வீட் செய்திருந்தார். இந்த விவகாரம் பிக்பாஸ் ரசிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

இதையும் படிங்க: ஆடையில்லாமல் போட்டோ ஷூட் நடத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்... வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி...!

இந்நிலையில் கஸ்தூரியின் குற்றச்சாட்டிற்கு விஜய் டி.வி. தரப்பில் இருந்து விளக்க அளிக்கப்பட்டுள்ளது. அதில், “நாங்கள் ஒரு பொறுப்பான சேனல். ஒப்பந்த விதிமுறைகளின்படி எங்கள் நிகழ்ச்சிகளில் பணிபுரியும் அனைவருக்கும் சரியான நேரத்தில் பணம் செலுத்துவதில் மிகவும் கவனமாக இருக்கிறோம். ஜிஎஸ்டி மட்டும்தான் பாக்கி பிக் பாஸ் தமிழில் கஸ்தூரி ஷங்கரின் பங்கேற்புக்கான தொழில்முறை கட்டணம் 2019 சீசனில் அவருக்கு செலுத்தப்பட்டாலும், அதற்கான ஜிஎஸ்டி தொகை அவரது ஜிஎஸ்டி தாக்கல்களில் பொருந்தாததால் எங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
 

 

இதையும் படிங்க: “பாண்டியன் ஸ்டோர்ஸ்” “பாரதி கண்ணம்மா” சீரியல்களில் அதிரடி மாற்றம்... பிக்பாஸுக்காக விஜய் டிவி செய்த காரியம்!

அவரிடமிருந்து சில விவரங்கள் மற்றும் ஆவணங்களை பெற நாங்கள் காத்திருக்கிறோம். இன்வாய்ஸ் வரல அது கிடைத்த பிறகு ஜிஎஸ்டி தொகை வழங்கப்படும். சேனலின் மற்றொரு நிகழ்ச்சியில் அவரது கலந்து கொண்டதற்கான இன்வாய்ஸையும் அவர் சமர்ப்பிக்க தவறிவிட்டார், இதன் காரணமாக எங்களால் அந்த கட்டணம் செலுத்த முடியவில்லை” இவ்வாறு விஜய் டிவி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. விஜய் டி.வி.யின் அதிரடி விளக்கத்தால் கஸ்தூரி அவிழ்த்துவிட்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 

click me!