பா.ஜ.க.வினரை வெறுப்பேத்துவதற்காகவே சூர்யாவுக்கு வாழ்த்து அனுப்பிய இயக்குநர் பா.ரஞ்சித்...

By Muthurama LingamFirst Published Jul 17, 2019, 3:41 PM IST
Highlights

மத்திய மாநில அரசுகளின் கல்விக்கொள்கை குறித்து விளாசித்தள்ளிய நடிகர் சூர்யாவுக்கு திரையுலகினர் மத்தியில் ஆதரவு பெருகிவரும் நிலையில் தற்போது இயக்குநர் பா.ரஞ்சித்தும் தனது ட்விட்டர் பதிவில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

மத்திய மாநில அரசுகளின் கல்விக்கொள்கை குறித்து விளாசித்தள்ளிய நடிகர் சூர்யாவுக்கு திரையுலகினர் மத்தியில் ஆதரவு பெருகிவரும் நிலையில் தற்போது இயக்குநர் பா.ரஞ்சித்தும் தனது ட்விட்டர் பதிவில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, மூன்று வயதிலிருந்தே இந்தி திணிக்கப்படுகிறது. எல்லோரும் அமைதியாக இருந்தால் இந்தி நம் மீது திணிக்கப்படும். புதிய கல்வி கொள்கை விஷயத்தில் நம் எண்ணத்தை ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊடகங்கள், மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உரக்கச் சொல்ல வேண்டும்' என்றார். சூர்யாவின் இந்த பேச்சுக்கு பாஜகவைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலரும் அ.தி.மு.க.அமைச்சர்கள் சிலரும்  கண்டனம் தெரிவித்து வந்தனர். 

துவக்கத்தில் சூர்யாவின் இக்கருத்துக்கு திரையுலகினர் மவுனம் காத்து வந்தநிலையில் சீமான் நீண்ட அறிக்கை ஒன்றின் வாயிலாக தனது ஆதரவுக் கரத்தை நீட்ட, நேற்று கமலும் தனது ஆதரவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இவ்விருவருவரின் ஆதரவின் நீட்சியாக இயக்குநர் பா.ரஞ்சித் இன்று வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில்,...புதியகல்வி கொள்கை பற்றி #சூர்யா அவர்களின் கருத்தை வரவேற்கிறேன்.இன்றைய கல்விச்சூழலில் மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார். சிறுபான்மையினர்,பெண்கள் ,மாணவர்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்தும், பேசியும், செயல்பட்டு வரும்  @Suriya_offl நாம் துணை நிற்போம்! #StandWithSuriya...என்று பதிவிட்டிருக்கிறார். எதற்கெடுத்தாலும் பாஜகவினரைப் பஞ்சாயத்துக்கு இழுக்கும் பா.ரஞ்சித் சூர்யாவுக்கு ஆதரவாகப் பேசியிருப்பதால் விவகாரம் இன்னும் கொஞ்சம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

புதியகல்வி கொள்கை பற்றி அவர்களின் கருத்தை வரவேற்கிறேன்.
இன்றைய கல்விச்சூழலில் மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார்.
சிறுபான்மையினர்,பெண்கள் ,மாணவர்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்தும், பேசியும், செயல்பட்டு வரும் நாம் துணை நிற்போம்!

— pa.ranjith (@beemji)

 

click me!