
பிரபல ஹாலிவுட் நடிகர் சார்லஸ் லெவின், கடந்த மாதம் 8 தேதி முதல் காணவில்லை என அவருடைய மகன் போலீசாரிடம் புகார் கொடுத்திருந்த நிலையில், அவருடைய உடல் தற்போது பிணமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அவருடைய குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
70 வயதாகும், சார்லஸ் லெவின், இவர் எவ்ரிபடி ரைட்ஸ் ஆப் காரவ்சல், அன்னி ஹால், உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். மேலும் அமெரிக்க டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவரை கடத்த 8 ஆம் தேதி முதல் திடீரென காணவில்லை என அவருடைய மகன் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடிகர் சார்லசை பல்வேறு இடங்களில் தேடிவந்தனர். இதை தொடர்ந்து அவருடைய கார் ஒரேகாணில் உள்ள செல்மா என்ற இடத்தின் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், அவருடைய காரை பரிசோதனை செய்தபோது, அவரின் நாய் காருக்குள்ளேயே இறந்துகிடந்தது. கார் நின்ற இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் ஒரு ஆண் பிணமாக கிடப்பதாக ஆண் பிணம் கிடப்பதையும் கண்டுபிடித்தனர். அந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்திய போது அது சார்லஸ் லெனின் உடல் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் எப்படி இறந்தார் என்கிற விசாரணையை தற்போது போலீசார் நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் ஹாலிவுட் திரையுலகில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சார்லஸின் குடும்பத்தினருக்கு பிரபலங்கள் தொடர்ந்து தங்களுடைய ஆறுதலை கூறி வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.