
திமுக இளைஞரணித் தலைவர் பதவி ஏற்றதால் இனி உதயநிதி ஸ்டாலின் படங்களில் நடிப்பதில் அவ்வளவாக ஆர்வம் காட்டமாட்டார் என்று சொல்லப்பட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன் கிடப்பில் போடப்பட்ட அவரது ‘சைக்கோ’படம் மீண்டும் உயிர்த்தெழுந்திருக்கிறது.
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வந்த படம் ‘சைக்கோ’. இந்த படத்தில் நித்யா மேனன், அதிதி ராவ் ஹைத்ரி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.ஒரு முக்கிய கேரக்டரில் இயக்குநர் ராம் நடிக்கிறார். இளையராஜா இசை அமைத்து வருகிறார்.
ஏவிஎம் சரவணனின் மகன் குகனின் மருமகனான மைத்ரேயா, சைக்கோ படத்தில் தன்னை ஹீரோவாக நடிக்க வைப்பதாக கூறி தன்னிடம் 1 கோடி பெற்றுக் கொண்டு ஏமாற்றிவிட்டார் என்று மிஷ்கின் மீது குற்றம்சாட்டியதோடு நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.அதன் காரணமாக சில மாதங்களாக சைக்கோ படத்தின் படப்பிடிப்பு நடைபெறாமலே முடங்கிக் கிடந்தது.இன்னொரு பக்கம் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் பிசியாக இருந்தார்.
இந்நிலையில் தடைபட்டிருந்த ’சைக்கோ’ பட பணிகள் உதயநிதியின் பதவி உயர்வால் மீண்டும் தொடங்கியுள்ளது.இளையராஜா இசையில் இந்த படத்திற்கான இறுதிப்பாடல் அண்மையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பாடலை இளையராஜா இசையில் பிரபல பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில், இளையராஜாவும், மிஷ்கினும் இணைந்து இந்த படத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றுள்ளார்கள்’ என்று பாராட்டியுள்ளார்.விறுவிறுப்பாக இறுதிகட்ட வேலைகள் நடந்து வரும் ‘சைக்கோ’ படத்தின் டீஸர் மற்றும் டிரைலர் விரைவில் வெளியாக இருக்கிறது. உதயநிதி இப்படத்தோடு தனது சினிமா பயணத்தை முடித்துக்கொள்வாரா அல்லது துவங்கி பாதியில் நிற்கும் இன்னும் இரு படங்களையும் முடித்துவிட்டு அரசியலில் செட்டில் ஆவாரா என்பது தெரியவில்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.