
பிரபல நகைச்சுவை நடிகரும் சமூக சேவகருமான பத்மஸ்ரீ விவேக்கின் தாயார் இன்று சற்று முன்னர் சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 86.
விவேக் 1961 நவம்பர் 19 ஆம் நாளில் அங்கய்யா பாண்டியன், மணியம்மாள் தம்பதியருக்கு மகனாக மதுரையில் பிறந்தார். இவரது சொந்த ஊர் கோயில்பட்டி - இலுப்பை ஊரணி. இவரது தந்தை இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ஆசிரியராக பணியாற்றியவர்.
சிலகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் (86) விவேக்கின் சாலிகிராமம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்றுவந்தார். நேற்று இரவு அவரது உடல்நிலை பலவீனமடைந்த நிலையில் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். அவரது உடல் நாளை காலை அவரது சொந்த ஊரான சங்கரன்கோயில் , பெருங்கோட்டூர் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.