கட்சி எதுக்கு... எனக்கு தான் ஆர்மி இருக்கே... அதிரடி ட்வீட் போட்ட ஓவியா... குஷியான ஆர்மி...!

Published : Nov 29, 2019, 05:28 PM IST
கட்சி எதுக்கு... எனக்கு தான் ஆர்மி இருக்கே... அதிரடி ட்வீட் போட்ட ஓவியா... குஷியான ஆர்மி...!

சுருக்கம்

அரசியல் கேள்விகளையே தவிர்த்த ஓவியா, இதற்கெல்லாம் மயங்கிவிடுவாரா என்ன யாரும் எதிர்பார்க்காத பதிலை கொடுத்து ரசிகர் வாயை அடைத்ததோடு மட்டுமல்லாது, மொத்த ஓவியா ஆர்மியையும் குஷியாக்கியுள்ளார். 

களவாணி, கலகலப்பு, மெரினா, மூடர்கூடம், மத யானைக்கூட்டம் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஓவியா. விஜய் தொலைக்காட்சி முதன் முதலில் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக ஓவியா களம் இறங்கினார். யாரைப் பற்றியும் கவலைப்படாத குணமும், மார்னிங் டான்ஸும் ஓவியாவிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே ஆரம்பித்துக் கொடுத்தது. முதன் முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுக்கு ஆர்மி என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியதே ஓவியா ரசிகர்கள் தான். அந்த நிகழ்ச்சி மூலம் பெரும் புகழ் கிடைத்தாலும், அதன் பின்னர் நடித்த படங்கள் எதுவும் ஓவியாவிற்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. 

இதையும் படிங்க: சிம்புவிற்கு மறுபடியும் வாய்ப்பு தந்த ஹன்சிகா... மீண்டும் சேரும் சூப்பர் ஜோடி... இந்த முறையாவது அது நடக்குமா?

சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஓவியாவிடம் ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்து கேட்கப்பட்ட கேள்வி கோபத்தை உருவாக்கியது. அதற்கு பதிலளிக்க மறுத்த ஓவியா, தனது டுவிட்டர் பக்கத்தில் அரசியல் சாராத நடிகர், நடிகைகளிடம் ஊடகங்கள் அரசியல் குறித்த கேள்விகளை தவிர்க்க வேண்டும் என்று பதிவிட்டார். அந்த பதிவில் கமெண்ட் செய்த ஓவியா ரசிகர் ஒருவர், நீங்கள் புதிய அரசியல் கட்சி ஆரம்பியுங்கள் என கொளுத்திப் போட்டார். 

அரசியல் கேள்விகளையே தவிர்த்த ஓவியா, இதற்கெல்லாம் மயங்கிவிடுவாரா என்ன யாரும் எதிர்பார்க்காத பதிலை கொடுத்து ரசிகர் வாயை அடைத்ததோடு மட்டுமல்லாது, மொத்த ஓவியா ஆர்மியையும் குஷியாக்கியுள்ளார். எனக்கு ஆர்மி இருக்கு என ஓவியா போட்ட பதில் ட்வீட்டை பார்த்த ஆர்மி, செம்ம குஷியாகி அதை ட்ரெண்ட் செய்து வருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?