ரஜினியை அடித்து ஒவர் டேக் செய்த விவேக்..!! வெற்றிடம் , காமெடி, நீங்களே என்னன்னு பாருங்க..!!

Published : Nov 29, 2019, 05:06 PM ISTUpdated : Nov 29, 2019, 05:22 PM IST
ரஜினியை அடித்து ஒவர் டேக் செய்த விவேக்..!! வெற்றிடம் ,  காமெடி,  நீங்களே என்னன்னு பாருங்க..!!

சுருக்கம்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது வெளியாகும்  திரைப்படங்களில் நேர அளவு குறைந்துள்ளதால் நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்றார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கான  வெற்றிடம் உருவாகி இருப்பதாக நடிகர் விவேக் கூறியுள்ளார்.  அவரின் கருத்து இளம் நகைச்சுவை நடிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சமீபத்தில் அரசியல் வெற்றிடம் உருவாகியுள்ளது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து தமிழக அரசியல்  தளத்தை சூடாக்கியது,  தற்போது அதே பாணியில் நடிகர் விவேக் நகைச்சுவையில் வெற்றிடம் என  தெரிவித்துள்ளது திரைகை திரும்பி பார்க்க வைத்துள்ளது.  

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான விவேக் பல திரைப்படங்களில் நடித்து  மக்களை சிந்திக்கத் தூண்டும் நகைச்சுவைகளை கூறி நடித்ததன் மூலம் சின்னக் கலைவாணர் என்ற பட்டம் பெற்றார். தமிழ் திரையுலகில் இவரின் இடத்தை இன்னும் யாராலும் நிரப்ப முடியவில்லை.  இந்நிலையில் தமிழ் சினிமாவில் வைக்கப்படும் நகைச்சுவை காட்சிகள் குறித்து ஒரு கோரிக்கை வைத்துள்ளார் என். எஸ் கிருஷ்ணனின் 116 வது  பிறந்த நாளான இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது சிலைக்கு நடிகர் விவேக் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது வெளியாகும்  திரைப்படங்களில் நேர அளவு குறைந்துள்ளதால் நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்றார். 

பழைய திரைப்படங்களை போல தற்போது வரும் திரைப்படங்களிலும் நகைச்சுவைக்கு என தனியாக கதை காட்சியமைப்புகள் வைக்கப்பட வேண்டும் என்றார்.  சமூக ஊடகங்களுக்கு  தணிக்கை தேவை என குறிப்பிட்ட அவர்,  அப்போதுதான் நகைச்சுவை என்பது மற்றவர்களை  காயப்படுத்தாமல் இருக்கும் என்றார்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?