திரையுலகமே கொண்டாடும் ‘த்ரிஷ்யம் 2’...மகிழ்ச்சி வெள்ளத்தில் மோகன் லால் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு...!

Published : Feb 21, 2021, 12:04 PM IST
திரையுலகமே கொண்டாடும் ‘த்ரிஷ்யம் 2’...மகிழ்ச்சி வெள்ளத்தில் மோகன் லால் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு...!

சுருக்கம்

சினிமா பிரியர்கள் மட்டுமின்றி திரையுலகினரான ராதிகா சரத்குமார், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளத்தில்  படத்தின் கதை, திரைக்கதை குறித்துச் சிலிர்ப்புடன் பகிர்ந்து வருகிறார்கள். இதனால், மகிழ்ச்சியடைந்த மோகன்லால் தனது நன்றியை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

நல்ல படத்தை உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் எப்போதும் பாராட்டி ஆதரிப்பார்கள் என்பதற்கு 'த்ரிஷ்யம் 2' படத்தின் வெற்றி மிகப்பெரிய சான்றாகும் என 
மோகன்லால் கூறியுள்ளார். 

இயக்குநர் ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான படம் 'த்ரிஷ்யம்'. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகத்தை இயக்க படக்குழு திட்டமிட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 'த்ரிஷ்யம் 2' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிய ஜீத்து ஜோசப், மிகக் குறுகிய காலத்திலேயே படத்தின் பணிகளை நிறைவு செய்தார். 

இதனைத் தொடர்ந்து, 'த்ரிஷ்யம் 2' படம் நேற்று ஓடிடி தளத்தில் வெளியானது. கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வெளியான முதல் நாளில் இருந்தே த்ரிஷ்யம் 2 படத்திற்கு வரவேற்பு குவிந்து வருகிறது. முதல் பாதி கதை இயல்பாக, மெதுவாக நகர்ந்தாலும், கடைசி கட்டத்தில் இடம் பெறும் 45 நிமிட கிளைமேக்ஸ் காட்சிகள் பிரம்பிப்பில் ஆழ்த்துவதாக ரசிகர்கள் ட்விட்டரில் பாராட்டி வருகின்றனர். 

சினிமா பிரியர்கள் மட்டுமின்றி திரையுலகினரான ராதிகா சரத்குமார், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளத்தில்  படத்தின் கதை, திரைக்கதை குறித்துச் சிலிர்ப்புடன் பகிர்ந்து வருகிறார்கள். இதனால், மகிழ்ச்சியடைந்த மோகன்லால் தனது நன்றியை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில், த்ரிஷ்யம் 2  படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. படம் பார்த்த அனைவரும் மெசேஜ் மறறும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பாராட்டி வருகின்றனர். 

நல்ல படத்தை உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் எப்போதும் பாராட்டி ஆதரிப்பார்கள் என்பதற்கு 'த்ரிஷ்யம் 2' படத்தின் வெற்றி மிகப்பெரிய சான்றாகும். சினிமாவை விரும்பும் மக்கள் தொடர்ந்து தரும் அன்பும் ஆதரவுமே நாங்கள் எங்களை மேம்படுத்திக்கொள்ள ஊக்கமளிக்கிறது. உங்கள் அனைவரது அன்புக்கும் நன்றிகள். ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கயாடு லோஹர் முதல் த்ரிஷா வரை: 2025-ல் அதிகம் பேசப்பட்ட, சோஷியல் மீடியை கலக்கிய டாப் 6 நடிகைகளின் பட்டியல்!
ரெண்டே நாளில் மயிலை வாழ வைப்பேன்: பாண்டியன் குடும்பத்தை கதறவிட சபதம் போட்ட பாக்கியம்: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 டுவிஸ்ட்!