கலைஞர்களை கெளரவித்த முதல்வர்... சரோஜா தேவி டூ சிவகார்த்திகேயனுக்கு கலைமாமணி விருது வழங்கி அசத்தல்...!

Published : Feb 20, 2021, 06:46 PM ISTUpdated : Feb 20, 2021, 06:48 PM IST
கலைஞர்களை கெளரவித்த முதல்வர்... சரோஜா தேவி டூ சிவகார்த்திகேயனுக்கு கலைமாமணி விருது வழங்கி அசத்தல்...!

சுருக்கம்

நேற்று 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான 'கலைமாமணி' விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தலைமை செயலகத்தில் 'கலைமாமணி' விருது பெற்ற கலைஞர்களுக்கு, பதக்கம் மற்றும் அதற்கான சான்றிதழை வழங்கினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.  

நேற்று 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான 'கலைமாமணி' விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தலைமை செயலகத்தில் 'கலைமாமணி' விருது பெற்ற கலைஞர்களுக்கு, பதக்கம் மற்றும் அதற்கான சான்றிதழை வழங்கினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

ஒவ்வொரு வருடமும் கலை பண்பாட்டை வளர்ப்பதற்காகவும், தொன்மையான கலை வடிவங்களைப் பேணி காப்பதற்காகவும், பல்துறை கலைஞர்களுக்கு தமிழக அரசு 'கலைமாமணி' விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. தமிழ் வளர்ச்சி மற்றும் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் இயல், இசை, நாடக மன்றத்தால், 1959 ஆம் ஆண்டில் இருந்தே இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் 128 பேருக்கும், ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருது 6 பெண் கலைஞர்களுக்கும் அறிவிக்கப்பட்டது.  முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன், யோகி பாபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சரோஜாதேவி ஜமுனா ராணி, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவ தர்ஷினி, சங்கீதா, டிவி நடிகைகள் நித்யா, சாந்தி வில்லியம்ஸ், டிவி நடிகர் நந்தகுமார் ஆகியோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இசையமைப்பாளர்கள் டி.இமான், தீணா, இயக்குநர்கள் கவுதம் மேனன், மனோஜ்குமார், ரவிமரியா, லியாகத் அலிகான், வசனகர்த்தா பிரபாகர், ஒளிப்பதிவாளர் ரகுநாத ரெட்டி, நடன இயக்குநர்கள் சிவசங்கர், ஸ்ரீதர், சண்டைப்பயிற்சியாளர்கள் ஜாக்குவார் தங்கம், தினேஷ்  உள்ளிட்ட மொத்தம் 132 பேருக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டது.

தற்போது விருது அறிவிக்கப்பட்ட கலைஞர்களுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமை செயலகத்தில், 'கலைமாமணி' விருதுகளை வழங்கினார். விருது பெறுவோருக்கு பரிசாக 5 சவரன் தங்க பதக்கமும், பாராட்டு சான்றிதழையும் வழங்கப்பட்டது.  மேலும் 'கலைமாமணி' விருது பெற்ற வறுமையில் வாடும் நலிந்த கலைஞர்களுக்கு தலா 50 ஆயிரம் நிதியும் வழங்கப்படுகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

6 மாஸ் படங்களின் சாதனையை தவிடு பொடியாக்கிய 'துரந்தர்'! பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு!
அருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு