தேசிய விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் காலமானார்..! சோகத்தில் திரையுலகினர்..!

By manimegalai aFirst Published Feb 20, 2021, 5:37 PM IST
Highlights

நான்கு முறை சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள விருது மற்றும் ஒருமுறை தேசிய விருதையும் பெற்ற பிரபல இசையமைப்பாளர் ஐசக் தாமஸ் காலமானார்.
 

நான்கு முறை சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள விருது மற்றும் ஒருமுறை தேசிய விருதையும் பெற்ற பிரபல இசையமைப்பாளர் ஐசக் தாமஸ் காலமானார்.

ஐசக் தாமஸ் திரைக்கதை எழுத்தாளரா தனது வாழ்வைத் தொடங்கியவர். பூனே திரைப்படக் கல்லூரியில் பயின்ற இவர் தம்பு,  கும்மட்டி, எஸ்தப்பா, ஆகிய மலையாள படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். பின்னர் 1997ஆம் ஆண்டில் வெளியான கன்னட திரைப்படமான Thaayi Saheba படத்தில் இணை இயக்குனராக அறிமுகமானார்.  அந்த படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. 

பின்னர் இயக்குனர் கிரிஷ்கசரவல்லியுடன் இணைந்து அவரது அடுத்தடுத்த படங்களில், இயக்குனராக பணியாற்றியதோடு, இசையமைக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இவர் இசையில் வெளியான பாடல்கள் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே... முழுநேர இசையமைப்பாளராகவே மாறினார். தமிழில் இவர் இசையமைத்துள்ள குருசேஷத்திரம், தூவானம், வர்ணம், உள்ளிட்ட படங்களுக்கும் நல்ல விமர்சனங்கள் கிடைத்தது.

இந்நிலையில் 72 வயதாகும் இவர், கடந்த சில வருடங்களாகவே இருதய பிரச்சனை மற்றும் வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

click me!