மொத்தம் 13 நாமினேஷன்ஸ்.. அசத்தும் கிறிஸ்டோபர் நோலனின் Oppenheimer திரைப்படம் - Oscar 2024 Nominations List!

By Ansgar R  |  First Published Jan 23, 2024, 11:08 PM IST

Oscar 2024 Nominations : திரையுலகை பொருத்தவரை ஆஸ்கர் விருதுகள் என்பது மிகப்பெரிய விருதாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஆஸ்கர் 2024ம் ஆண்டுக்கான நாமினேஷன் பட்டியலில் இந்திய திரைப்படங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் அந்த விழாவிற்கான இறுதி கட்ட பரிந்துரை பட்டியல் தற்பொழுது வெளியாகி உள்ளது. பிப்ரவரி 12ஆம் தேதி துவங்கும் ஆஸ்கர் தொடர்பான பணிகள், பிப்ரவரி 27ஆம் தேதி முடிந்து, பிறகு மார்ச் 10ஆம் தேதி இறுதி வெற்றியாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும். இப்பொழுது ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள திரைப்படங்கள் மற்றும் நடிகர், நடிகைகள் குறித்த விவரங்களை பின்வருமாறு காணலாம்.

Women Directors: சோதனைகளை கடந்து... தமிழ் சினிமாவின் தன்னம்பிக்கை தூண்களாக மாறிய பெண் இயக்குனர்கள்!

Latest Videos

undefined

ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள சிறந்த படங்கள் 

American Fiction,
Anatomy of a Fall
Barbie
The Holdovers
Killers of the Flower Moon
Maestro
Oppenheimer
Past Lives
Poor Things

ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட சிறந்த இயக்குனர்கள் 

இயக்குனர் Justine Triet அவரது Anatomy of a Fall என்ற படத்திற்காக..
இயக்குனர் Martin Scorsese அவரது Killers of the Flower Moon என்ற படத்திற்காக..
இயக்குனர் Christopher Nolan அவரது Oppenheimer என்ற படத்திற்காக..
இயக்குனர் Yorgos Lanthimos அவரது Poor Things என்ற படத்திற்காக..
இயக்குனர் Jonathan Glazer தனது The Zone of Interest என்ற படத்திற்காக..

ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நடிகர்கள் 
 
நடிகர் Bradley Cooper
நடிகர் Colman Domingo
நடிகர் Paul Giamatti
நடிகர் Cillian Murphy (Oppenheimer படத்திற்காக)
நடிகர் Jeffrey Wright

ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நடிகைகள் 

நடிகை Annette Bening
நடிகை Lily Gladstone
நடிகை Sandra Hüller
நடிகை Carey Mulligan
நடிகை Emma Stone

அனிரூத் இசையில் உருவாகும் Devara.. சோகத்தில் மூழ்கிய ஜூனியர் NTR ரசிகர்கள் - ரிலீசாவதில் தாமதம் - ஏன்?

click me!