ஆன்லைன் சூதாட்ட விளம்பரம்... நடிகை தமன்னா மீது டிஜிபியிடம் புகார்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 29, 2020, 4:25 PM IST
Highlights

இருதினங்களுக்கு முன்பு கூட ஆன்லைனில் சீட்டு விளையாடி பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

தமிழகத்தில் பல குடும்பங்களை நடுத்தெருவிற்கு கொண்டு வந்த லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய இன்டர்நெட் யுகத்தில் ஆன்லைனில் அறிமுகமாகியுள்ள சூதாட்டங்கள் பெரும் பிரச்சனைகளை சத்தமில்லாமல் உருவாக்கி வருகின்றனர். அதுவும் லாக்டவுன் நேரத்தில் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் இளைஞர்கள் பலரும் ஆன்லைன்  சூதாட்டத்திற்கு அடிமை ஆகிவருகின்றனர். 

 

இதையும் படிங்க: ஆண் நண்பர்களுடன் குடியும் கும்மாளமுமாக அமலா பால்... போட்டி போட்டு சரக்கடிக்கும் வைரல் வீடியோ...!

இதனால் இளைஞர்களின் பொன்னான நேரமும், பணமும் விரையமாவதோடு தற்கொலை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. நாடு முழுவதும் ரம்மி, பாஸியன், லியோவேகாஸ், ஸ்பார்டன்போக்கர், போக்கர் டங்கல், பாக்கெட் 52, ஜீனியஸ் கேசினோ என விதவிதமான ஆன்லைன் சூதாட்டங்கள் முளைத்து வருகின்றன. இருதினங்களுக்கு முன்பு கூட ஆன்லைனில் சீட்டு விளையாடி பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

 

இதையும் படிங்க: 

பல அரசியல் கட்சிகளும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களை தடை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்த நிலையில்,  ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, நடிகை தமன்னா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி சார்பில் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளனர். 

click me!