வாழ்க்கையில் எத்தனையோ வழிகள்... பழக்கத்தை விட்டு விடலாம்... பாசத்தை விட முடியுமா..?

By Thiraviaraj RM  |  First Published Apr 21, 2020, 6:31 PM IST

அவன், அப்படி ஒன்றும் 'நல்லவன்' எல்லாம் இல்லை. அதனால் அவளை ஏற்க மறுக்கிற அவனது மனம், குழப்பத்தில் ஆழ்கிறது. அவனை ஆற்றுப் படுத்துகிறாள் அவள்.  
 


தமிழ்ப்பாடல் அழகும் ஆழமும்-17: 16. மனதை அமைதிப் படுத்தும் அற்புதமான பாட்டு!

ஆஹா... எத்தனை இனிமையான பாடல்..? எத்தனை தெளிவான வாதம்..? வியந்து வியந்து கேட்கத் தூண்டுகிற பாடல். கண்ணதாசன், ஏ.எல். நாராயணன் இயற்றிய பாடல்களுக்கு,  இருக்கிறார்கள். இசை அமைத்தவர் வேதா.'செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்...' என்கிற பாடல் இன்றளவும் கேட்டு ரசிக்கப் படுகிற மிகப் பிரபலமான பாடல். 

Tap to resize

Latest Videos

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு - இந்த நகைச்சுவை திரில்லர். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் அறிமுகம் ஆகாத, அவ்வளவு ஏன்..  கணினி என்கிற ஒன்றே வராத காலம். (1969)
இந்தப் பின்னணியில் பார்த்தால், படத் தொடக்கத்தில் வருகிற 'டைட்டில்ஸ்' ஆச்சரியப்பட வைக்கிறது. அவனை விரும்புகிறாள் அவள். அவன், அப்படி ஒன்றும் 'நல்லவன்' எல்லாம் இல்லை. அதனால் அவளை ஏற்க மறுக்கிற அவனது மனம், குழப்பத்தில் ஆழ்கிறது. அவனை ஆற்றுப் படுத்துகிறாள் அவள்.  

'கவலைப் படாதே.. எல்லாமே மனசுலதான் இருக்கு... 
பழக்கத்தை விட்டு விடலாம்; பாசத்தை விட முடியுமா..? வாழ்க்கையில் எத்தனையோ வழிகள் உள்ளன. சரியானதைத் தேர்ந்து எடுத்து, அதில் தேர்ச்சி பெறு..' என்னவொரு வலுவான வாதம்... எத்தனை அழகாக எடுத்து உரைக்கிறது... நாயகன் ஜெய்சங்கர் உதிர்க்கும் புன்னகை... நாயகி பாரதி காட்டும் இயல்பான முக பாவனைகள்!
பாருங்கள்.. அசந்து போவீர்கள். இதுதான் நளினமான நடிப்பின் உச்சம். 

மனதை அமைதிப் படுத்தும் அற்புதமான திரைப்பாடல்களில் இதற்கு ஒரு தனி இடம் நிச்சயம் உண்டு. கேட்டுப்பாருங்கள்... பி.சுசீலாவின் குரல், 'எங்கேயோ' கொண்டு போகும். 

பாடல் வரிகள்:

நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி 
நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே 
கொஞ்சும் மனமும் குளிர்ந்த வாழ்வும் 
கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே..?

பழக்கம் என்பது பழகுவது - அது 
விலக்கும் போது விலகுவது 
பாசன் நேசம் காதல்தானே 
வாழ்வதற்கென்றே வளருவது..? 
நிழல் தொடருவது..
மதி மயங்குவது... வழி
நேற்றும் இன்றும் மாறுவது. 

பாதையில் எத்தனை காலடிகள் - இந்த
பயணத்தில் எத்தனையோ வழிகள் 
காதலில் ஓர் வழி கவலையில் ஓர் வழி
கவனித்துப் பார்க்கட்டும் உன் விழிகள். 
ஒன்றைத் தேர்ந்து எடு 
அதை சேர்ந்து விடு. 
இந்த உலகத்தின் சுகங்களை 
வாழ்ந்து விடு.

நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி 
நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே 
கொஞ்சும் மனமும் குளிர்ந்த வாழ்வும் 
கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே..?

(வளரும்.

 
- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.

இதையும் படியுங்கள்:-

1.கட்டாயத் திருமணத்தை முறியடிக்க பகீர் திட்டம்... வீட்டிற்குள் நுழைந்த வளையல்காரன்..!

2.ஔவையாருக்கு கே.பி.சுந்தராம்பாள்... அகத்தியருக்கு சீர்காழி கோவிந்தராஜன்..!

3.இசை நயம், ஓசை வளம் கொண்ட கே.பி.சுந்தரம்பாள்... தகதக தகதகவென ஆடவா..!

 


 

click me!