
கொரோனா தொற்று காரணமாக இந்தியா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருவதால், சாதாரண மக்கள் முதல் திரைபிரபலங்கள் வரை அனைவரும் , எங்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை உருவாகியுள்ளது.
இப்படி ஒரு சூழ்நிலை உள்ளது இளசுகளுக்கு போர் அடித்தாலும்... சிலர் தங்களுக்கு இது பிடித்துள்ளது என்பதை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர். அந்த வகையில், தற்போது பிரபல நடிகை ராதிகா ஆப்தே.. இந்த ஊரடங்கை நேசிப்பதாக கூறி, உள்ளாடை மட்டுமே அணிந்து, அதிலும் மோசமான கவர்ச்சியை ரசிகர்களுக்காக அள்ளி தெறித்துள்ளார்.
எப்போதும், இந்தியாவிற்கும், வெளிநாட்டிற்குமாய் கணவரை பார்க்க ஓயாமல் பிளைட்டில் பயணம் செய்து வந்த ராதிகா ஆப்தே, தற்போது கணவருடன் செம்ம ரொமான்டிக்காக, பொழுதை போக்கி வருகிறார் என்பது இவரின் வார்த்தைகளில் இருந்தே வெளிப்படுகிறது.
மேலும், தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதத்திலேயே ராதிகா... ஓவர் கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டு லாக் டவுனை நேசிப்பதாக கூறியுள்ளார் என சில நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள். எப்போதும் கவர்ச்சி கட்டுவதில் தயங்காத ராதிகா இப்போது காட்டியுள்ள கவர்ச்சி சற்று மோசம் தான் என்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என சிலர் கூறி வருகிறார்கள்.
பாலிவுட் திரையுலகில் ஓவர் கவர்ச்சி கன்னியாக வலம் வந்து ராதிகா ஆப்தே ரணகளம் செய்தாலும், தமிழில் இவர் நடித்த தோணி, அழகுராஜா, மற்றும் கபாலி ஆகிய படங்களில் குடும்ப பாங்கான கதாப்பாத்திரத்திலேயே நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராதிகா ஆப்தே வெளியிட்டுள்ள புகைப்படம் இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.