காலில் கூட விழுகிறேன்... அசிங்கமா போயிடும்... வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகளிடம் கெஞ்சிய மதுவந்தி!!

Published : Oct 14, 2021, 04:04 PM ISTUpdated : Oct 14, 2021, 04:07 PM IST
காலில் கூட விழுகிறேன்... அசிங்கமா போயிடும்... வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகளிடம் கெஞ்சிய மதுவந்தி!!

சுருக்கம்

ஒய்.ஜி.மகேந்திரனின் (YG Mahendharan) மகளும், நாடகம், திரைப்படம், அரசியல், தொழிலதிபர் என அனைத்திலும் கவனம் செலுத்தி வரும் மதுவந்தி (Madhuvanthi) வாங்கிய பணத்தை திரும்பி செலுத்தாதலால் அவரது வீட்டுக்கு சீல் வைத்துள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

ஒய்.ஜி.மகேந்திரனின் மகளும், நாடகம், திரைப்படம், அரசியல், தொழிலதிபர் என அனைத்திலும் கவனம் செலுத்தி வரும் மதுவந்தி வாங்கிய பணத்தை திரும்பி செலுத்தாதலால் அவரது வீட்டுக்கு சீல் வைத்துள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்: கொசுவலை போன்ற கருப்பு நிற ட்ரான்ஸ்பரென்ட் சேலையில்... தினுசு தினுசா போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய ஓவியா!!

மதுவந்தி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வீனஸ் காலனி 2 வது குறுக்கு தெருவில் அமைத்துள்ள ஆசியானா அபார்ட்மெண்டில் கடந்த 2016 ஆம் ஆண்டு வீடு ஒன்றை வாங்கி, அங்கு தான் வசித்து வருகிறார். இந்த வீட்டை வாங்குவதற்காக, சுமார் ஒரு கோடி ரூபாய் இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் இருந்து மதுவந்தி பெற்றுள்ளார். வீடு வாங்கிய பின்னர், சில தவணைகள் மட்டுமே சரிவர கட்டிய நிலையில் பின்னர் பணத்தை செலுத்தாமல் இருந்துள்ளார்.

இதனால் இவருக்கு வீடு வாங்க பணம் கொடுத்த  இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் சார்பில் இவருக்கு நோட்டிஸ் மூலம் வட்டியுடன் பணத்தை திரும்ப கட்ட சொல்லியுள்ளனர். ஆனால் இவர் தரப்பில் இருந்து எந்த பதிலும் கூறவில்லை.

மேலும் செய்திகள்: மிதமான மேக்கப்பில் அழகில் மெய் சிலிர்க்க வைத்த வாணி போஜன்..! துப்பட்டாவை காற்றில் பறக்க விட்டு கலக்கல் போஸ்..!

 

எனவே வங்கி அதிகாரிகள் வட்டிப்பணத்துடன் அசலையும் சேர்த்து ரூ 1,21,30,867 பணம் கட்ட சொல்லி, அல்லிகுளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மதுவந்தியின் வீட்டிற்கு சீல் வைத்து வீட்டை இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இதை தொடர்ந்து வழக்கறிஞர், கமிஷனர் வினோத் குமார், முன்னிலையில் மதுவந்தியின் வீட்டுக்கு போலீசார் பாதுகாப்போடு சீல் வைக்கப்பட்டு வீட்டுச் சாவி இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: 37 வயதிலும் முட்டி மேல் குட்டை உடை அணிந்து... முரட்டு கவர்ச்சியில் தெறிக்கவிடும் பிரியாமணி!!

 

தன்னுடைய வீட்டுக்கு சீல் வைக்க வந்த அதிகாரிகளிடம், இப்படி செய்தால் தனக்கு மிகவும் அசிங்கமாக ஆகிவிடும், எனவே நாளை ஒரு நாள் மட்டும் அவகாசம் கொடுங்கள் என மதுவந்தி கெஞ்சியுள்ளார். அவர்களின் கால்களில் கூட விழுகிறேன் என்று கூறியும், அவரகள் அதை தங்களால் இப்போது எதுவும் செய்ய இயலாது என கூறி வீட்டுக்கு சீல் வைத்துள்ளனர். தற்போது இது குறித்த வீடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாட்டாமை டீச்சரின் மகளா இது? அம்மாவை தொடர்ந்து சரத்குமாருடன் நடித்த மகள்: ரசிகர்கள் அதிர்ச்சி!
கயாடு லோஹர் முதல் த்ரிஷா வரை: 2025-ல் அதிகம் பேசப்பட்ட, சோஷியல் மீடியை கலக்கிய டாப் 6 நடிகைகளின் பட்டியல்!