
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த' படத்தில் இருந்து, இமான் இசையில் வெளியான இரண்டு சிங்கிள் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்று மாலை 6 மணிக்கு அண்ணாத்த படத்தின் டீசர் வெளியாக உள்ளது.
மேலும் செய்திகள்: சிறை உணவை சாப்பிட மறுக்கும் ஆர்யன் கான்..!! இப்படி தான் வாழ்கிறாரா..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள, 'அண்ணாத்த' திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் ஒருபுறம் பரபரப்பாக சென்று கொண்டிருக்க, மற்றொரு புறம் இந்த படத்தின் புரோமோஷன் பணிகளில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது.
அந்த வகையில் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பல படங்களில் பின்னணி பாடியுள்ள பாடும் நிலா எஸ்.பி. பி, கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காகவே, 'அண்ணாத்த' படத்தில் பாடிய அறிமுக பாடலான 'அண்ணாத்த அண்ணாத்த' பாடல் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாவது பாடலான 'சார காற்றே' பாடல் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் செய்திகள்: முழு பூசணிக்காயை சோத்துல மறைத்த இசைவாணி..! திருமணம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசலையே..! ஏன்?
தொடர்ந்து 'அண்ணாத்த' படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட் தகவல்களை வெளியிட்டு வரும், படக்குழு... இன்று மாலை 6 மணிக்கு ஆயுத பூஜையை முன்னிட்டு, இப்படத்தின் டீசரை வெளியிட உள்ளது. இந்த தகவல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போதிலும், தற்போது புதிய மோஷன் வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த தீபாவளியை தலைவர் தீபாவளியாக கொண்டாட தயாராகி இருக்கும் ரஜினி ரசிகர்கள் இன்று மாலை டீசரை சமூக வலைத்தளத்தில் தெறிக்க விட்டு ஆயுத பூஜையை கொண்டாடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.