
இன்றைய பிக்பாஸ் முதல் புரோமோவில், தெருக்கூத்து கலைஞர் தாமரை செல்வி தன்னுடைய மகனை தன்னிடம் இருந்து பிரிந்து விட்டதாகவும் அவனை காப்பாற்ற வேண்டும் என்றே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தேன் என கூறினார். இதை தொடர்ந்து வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில் அபிஷேக் மிகவும் ஆதங்கத்தோடு தாமரையை பார்த்து பேசும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் இருந்து, ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த கஷ்டங்கள் மற்றும் கடந்து வந்த பாதைகள் குறித்து கூறி வருகிறார்கள். அந்த வங்கியில் நேற்று, அக்ஷரா, ப்ரியங்கா, மற்றும் சிபி ஆகியோர் கூறிய நிலையில் இன்றைய தினம் தாமரை செல்வி மற்றும் அபிஷேக் ஆகியோர் கூறும் காட்சிகள் புரோமோவில் வெளியாகி இருந்தது.
தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில், ஜக்கி மற்றும் பவானி ஆகியோருடன் பேசி கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் அபிஷேக், தாமரையை பார்த்து "நீ இங்க வரணும் என்பதை யாரோ ஒருத்தர் பண்ணுன முடிவு இல்ல. பல பேர் பண்ணுன முடிவு. அந்த முடிவு எதற்காக என்றால் உன் கதையை நீ உலகத்திற்கு உரைக்க சொல்ல வேண்டும் என்பதற்காக. உன் மகன் கண்டிப்பா உன்கிட்ட வர தான் போறான் அதில் மாற்று கருத்தே இல்லை... அது ஒரு தாயோட குமுறல். நீ பேசுனது யார் மனசுல ஒட்டுச்சோ இல்லையோ, பல பேரிடம் போய் சேர்ந்துருக்கு. அதனால நீ ஜெயிச்சே ஆகணும். உனக்கு இப்படி ஒரு வாழ்க்கையை கொடுத்த பல பேர் பாவத்தை சம்பாதிச்சிருக்கான் என மிகவும் ஆதங்கத்தோடு பேசியுள்ளார். எனவே தாமரை என்ன பேசி இருப்பார் என்கிற ஆர்வம் அனைவர் மத்தியிலும் அதிகரித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.