போலீசில் அடிவாங்க வைத்த தாய்... போட்டியாளர்கள் முன் குமுறிய நாடியா..!

Published : Oct 14, 2021, 02:31 PM IST
போலீசில் அடிவாங்க வைத்த தாய்... போட்டியாளர்கள் முன் குமுறிய நாடியா..!

சுருக்கம்

பிக்பாஸ் போட்டியில் மூன்று குழந்தைகளுக்கு தாயான நாடியாவும் 18 போட்டியாளர்களின்  ஒருவராக கலந்து கொண்டுருள்ள நிலையில், நாடியா (Nadhiya) இன்று தன்னுடைய வாழ்க்கை பற்றி மற்ற போட்டியாளர்களிடம் பகிர்ந்து கொள்ளும் புரோமோ வெளியாகியுள்ளது.  

பிக்பாஸ் போட்டியில் மூன்று குழந்தைகளுக்கு தாயான நாடியாவும் 18 போட்டியாளர்களின்  ஒருவராக கலந்து கொண்டுருள்ள நிலையில், நாடியா இன்று தன்னுடைய வாழ்க்கை பற்றி மற்ற போட்டியாளர்களிடம் பகிர்ந்து கொள்ளும் புரோமோ வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இன்றைய முதல் புரோமோவில், யாஷிகாவின் முன்னாள் காதலரான நிரூப், அவரை பற்றி பெருமையாக பேசி... அவரால் தான் நான் இந்த அளவுக்கு வளர்ந்தேன். திரையுலகை பற்றிய புரிதல் அவரால் தான் வந்தது என கூறினார். இவர் கூறியதை பார்த்து மற்ற போட்டியாளர்கள் கை தட்டி வரவேற்றனர்.

இன்றைய இரண்டாவது புரோமோவில் பேசியுள்ள நாடியா... "தன்னுடைய அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்பதால் வாழ்க்கையில் என்னென்ன இழந்தேன் என்பதை கூறியுள்ளார். குறிப்பாக தனக்கு அம்மாவின் மேல் வெறுப்பு வந்தது என்றால் போலீஸ்காரங்க கிட்ட என்னை அடி வாங்க வச்சாங்க.

என் வாழ்க்கை முழுவதுமே வேலை வேலை என்று இருந்திருக்கிறேன். நான் என்னுடைய டீனேஜ் வயதை அனுபவித்ததில்லை. கல்லூரி வாழ்க்கையும் அனுபவித்ததில்லை. எனக்கு வாழ்க்கையில் மனிதர்கள் கொடுக்காத பெருமையை ஒரு ஆப் கொடுத்தது என்று உணர்வு பூர்வமாக பேசியுள்ளார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

திமிராக நடுவிரலை தூக்கிக் காட்டிய ஷாருக்கான் மகன் ஆர்யன் கான்... போலீஸுக்கு பறந்த புகார்
மலேசியாவில் அஜித்தை ரவுண்டு கட்டிய ரசிகர்கள்... கூட்டத்தின் நடுவே கூலாக AK செய்த சம்பவத்தை பாருங்க..!