’இஸ்லாமியப் பெண் நெற்றியில் குங்குமம் வைப்பதா?’...எம்.பி.,நடிகைக்கு வலுக்கும் எதிர்ப்பு...

By Muthurama LingamFirst Published Jul 1, 2019, 11:46 AM IST
Highlights

’மத நம்பிக்கைகளுக்கும் அணியும் ஆடைக்ளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் என்ன மாதிரியான ஆடைகள் அணியவேண்டும் என்று யாரும் எனக்கு ஆலோசனை சொல்லவேண்டிய அவசியமும் இல்லை’என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கொந்தள்த்திருக்கிறார் முன்னாள் நடிகையும், இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான நஸ்ரத் ஜஹான்.

’மத நம்பிக்கைகளுக்கும் அணியும் ஆடைக்ளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் என்ன மாதிரியான ஆடைகள் அணியவேண்டும் என்று யாரும் எனக்கு ஆலோசனை சொல்லவேண்டிய அவசியமும் இல்லை’என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கொந்தளித்திருக்கிறார் முன்னாள் நடிகையும், இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான நஸ்ரத் ஜஹான்.

வங்காள நடிகை நஸ்ரத் ஜஹான் (வயது 29), பாராளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்று எம்.பி. ஆகியுள்ளார். கடந்த மாதம் அவருக்கும், தொழிலதிபர் நிகில் ஜெயின் என்பவருக்கும் துருக்கியில் திருமணம் நடைபெற்றது. கடந்த 25-ந் தேதி, பதவி ஏற்பதற்காக நஸ்ரத் பாராளுமன்றத்துக்கு வந்தார். அப்போது, முஸ்லிம் பெண்ணான அவர், குங்குமம் வைத்திருந்ததுடன், தாலி அணிந்திருந்தார்.

மேலும், பதவி பிரமாண உறுதிமொழியை வாசித்து முடித்தவுடன், ‘வந்தே மாதரம்’ என்று கூறினார். அவரது செயலுக்கு எதிராக இஸ்லாமிய மத குருக்கள், ‘மதக்கட்டளை’ பிறப்பித்துள்ளனர். அவரது செயல் இஸ்லாமுக்கு விரோதமானது என்றும் ஜாமியா மதகுரு முப்தி ஆசாத் கசாமி தெரிவித்தார்.

ஆனால், அந்தக் கருத்துக்களை பொருட்படுத்தாத  நஸ்ரத் அவர்களுக்கு  பதிலடி கொடுத்துள்ளார். தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அதற்கு பதிலளித்த அவர்,... சாதி, இன, மத எல்லைகளை கடந்த இந்தியாவின் பிரதிநிதி நான். நான் அப்போதும்  இப்போதும் முஸ்லிமாகவே இருக்கிறேன். ஆனால், நான் எதை அணிய வேண்டும் என்று யாரும் கருத்து கூறக்கூடாது. மதநம்பிக்கை என்பது ஆடைக்கு அப்பாற்பட்டது” என்று அவர் கூறியுள்ளார். நஸ்ரத்தின் இந்தக் கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் அவர் பக்கத்தில் கமெண்டுகள் குவிந்துவருகின்றன.

click me!