
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கி நேற்றுடன் ஒரு வாரம் முடிவடைந்தது. முதல் வாரம் என்பதால், இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து எந்த பிரபலமும் வெளியேற்ற படவில்லை. ஆனால் இனி வரவிருக்கும் ஒவ்வொரு வாரமும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படியும் மக்களின் ஓட்டுகள் அடிப்படையிலும் பிரபலங்கள் வெளியேற்ற படுவார்கள்.
அந்த வகையில் இன்று நாமினேஷன் செய்யும் படலம் துவங்கியுள்ளது தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் இருந்து தெரிகிறது.
இன்றைய நாமினேஷனில் மீரா மிதுன், அபிராமி மற்றும் சாக்சியை நாமினேட் செய்கிறார். மீராவை தொடர்ந்து அபிராமி, ஜாங்கிரி மதுமிதாவை நாமினேட் செய்கிறார். நடிகை ஷெரின் மதுமிதா மற்றும் மீராமிதுனை நாமினேஷன் செய்கிறார்.
இவரை தொடர்ந்து பாத்திமாபாபு யாரும் எதிர்பார்க்காத வண்ணம், கவின், சரவணன் ஆகிய இருவரையும் நாமினேஷன் செய்கிறார். பின் வனிதாவின் நாமினேஷன் காட்சி காட்டப்படுகிறது. அதில் அவர் இயக்குனர் மற்றும் நடிகருமான சேரனை தனிப்பட்ட காரணத்திற்காக நாமினேட் செய்வதாக கூறி உள்ளார்.
இன்றைய நிகழ்ச்சியில் தான், பிரபலங்கள் நாமினேட் செய்வதற்கான காரணம் தெரியவரும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.