அமெரிக்காவில் நடிகர் நெப்போலியன் கட்டிய அம்மன் கோவில்...

Published : Jul 01, 2019, 11:17 AM IST
அமெரிக்காவில் நடிகர் நெப்போலியன் கட்டிய அம்மன் கோவில்...

சுருக்கம்

தமிழில் வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடிக்கும் முடிவில் குடும்பத்தினருடன் அமெரிக்காவில் நிரந்தரமாக செட்டில் ஆகிவிட்ட வில்லன் நடிகர் நெப்போலியன் ஒரு வேண்டுதலின் பொருட்டு அங்கே ஒரு அம்மன் கோவில் கட்டியிருக்கிறாராம்.  

தமிழில் வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடிக்கும் முடிவில் குடும்பத்தினருடன் அமெரிக்காவில் நிரந்தரமாக செட்டில் ஆகிவிட்ட வில்லன் நடிகர் நெப்போலியன் ஒரு வேண்டுதலின் பொருட்டு அங்கே ஒரு அம்மன் கோவில் கட்டியிருக்கிறாராம்.

தமிழக அரசியலிலும், சினிமாவில் பிசியாக இயங்கி வந்த நடிகர் நெப்போலியன் கடைசியாக திழில் ‘முத்துராமலிங்கம்’என்ற படத்தில் மட்டுமே நடித்தார். அவர் அமெரிக்காவில் செட்டில் ஆனதற்கு முக்கிய காரணமே தனது மகனுக்கு சிறப்பான சிகிச்சையை வழங்குவதற்குத்தான். அந்த சிகிச்சையில் தனது மகன் ஓரளவுக்குத் தேறி வந்த நிலையில் மகன் குணமடையும் சமயம் தான் வசிக்கும் பகுதியில் ஒரு அம்மன் கோவில் கட்டவேண்டும் என்ற வேண்டுதல் இருந்ததாம்.

அதை மறக்காத நெப்போலியன் சமீபத்தில் தான் வசிக்கும் பகுதியில் ஒரு அம்மன் கோயில் கட்டி முடித்தாராம். முதலில் தமிழர்கள் மட்டுமே வழிபட்டு வந்த அந்த அம்மன் கோவிலுக்கு தற்போது அமெரிக்க பக்தர்களும் வந்து வழிபட ஆரம்பித்திருக்கிறார்களாம். அதைப் பூரிப்போடு சென்னைக்கு இரு தினங்களுக்கு வருகை தந்த நெப்போலியன் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். தற்போது நெப்போலியன் ‘டெவில்ஸ் நைட்’,’கிறிஸ்மஸ் கூப்பன்’ ஆகிய இரு ஹாலிவுட் படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜனனிக்காக விசாலாட்சி எடுக்கும் ரிஸ்க்; சுத்துபோட்ட போலீஸ்... சிக்கினாரா குணசேகரன்? எதிர்நீச்சல் தொடர்கிறது
டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!