
நாடோடித் தென்றல் திரைப்படத்தில் கிராமிய முக லட்சணத்துடன் அறிமுகம் கொடுத்தவர் நடிகை ரஞ்சிதா. இந்தப் படத்தைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து 90களில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தார்.
பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியதும் 2000 ஆம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த ராணுவ அதிகாரி ராகேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு அவருடன் கேரளாவில் செட்டில் ஆனார்.
திருமணம் ஆன சில வருடங்களிலேயே கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார். அதற்குப் பின் ஒரு சில சின்னத்திரை சீரியல்கள் மற்றும் வெள்ளித்திரையில் அக்கா அண்ணி போன்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வந்தார். மேலும் இவர் சில காலங்கள் முதுகு வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், தோழி ஒருவர் நித்தியானந்தாவைப் பற்றிக் கூறியதும், யோகப் பயிற்சிகள் செய்து முதுகுவலியை குணமாக்கிக்கொள்ள நித்யானந்தாவிடம் சில நாட்கள் சிஷ்யையாக இருந்தார். அப்போது தான் இவர்களைப் பற்றிய சர்ச்சையான வீடியோக்கள் வெளியானது.
தற்போது பெண் துறவியாக நித்யானந்தாவிடம் தீக்ஷை பெற்று தன்னுடைய பெயரை ஆனந்தமகி என மாற்றிக்கொண்டு தலைமை ஆஸ்ரமத்தின் தலைமைப் பொறுப்பு வகித்து வருகிறாராம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.