
அடர்த்தியான இலக்கியங்களை படைக்கும் கலைஞனாக அறியப்பட்ட எழுத்தாளர் ஜெயமோகன் இதோ ஜனரஞ்சக திறைத்துறையிலும் பிஸியாகிவிட்டார்.
‘இப்படியொரு படம் இனிமேல் வருமான் என்று தெரியவில்லை’ என்று சூப்பர் ஸ்டாரே சூப்பர் பில்ட் - அப் கொடுத்திருக்கும் ’2.0’ படத்தின் வசனகர்த்தா ஜெயமோகனேதான்.
எழுத்தாளர் சுஜாதாவின் மறைவுக்குப் பிறகு இயக்குநர் ஷங்கருக்கு ஜெயமோகன் தான் கரம் கொடுக்கிறார். அந்த வகையில் 2.0வின் வசன பொறுப்பை இவரிடம் கொடுத்திருந்தார் ஷங்கர்.
இதையெல்லாம் பற்றி பேசியிருக்கும் ஜெயமோகன் “2.0 படத்தில் வசனம் எழுதும் பணி கொடுக்கப்பட்டது அவ்வளவே. அதை மட்டும் நான் செய்து கொடுத்திருக்கிறேன். கதையின் முழு வடிவம் என்ன்வென்று இயக்குநருக்கு மட்டுமே தெரியும்.” என்று அடக்கி வாசித்தவர்,
பின் “இந்திய திரைப்படங்கள் ஹாலிவுட் தரத்துக்கு வளர்ந்திருக்கிறதா என்று கேட்கிறார்கள். ஹாலிவுட் தரமென்றால் அதில் பல படி நிலைகள் உள்ளன. அங்கு எடுக்கப்படும் ‘பட்ஜெட் - ஏ’ லெவல் படங்களை இங்கே எடுக்க முடியாது. அந்த அளவுக்கு தொழில்நுட்ப வசதியும், பொருளாதார வசதியும் இங்கில்லை.
ஆனால் ஹாலிவுட்டின் ‘பட்ஜெட் - பி’ லெவல் படங்கள் இங்கு எடுக்கப்படுகின்றன. பாகுபலி போன்ற படங்களை சொல்லலாம்.
தமிழில் ஹாலிவுட் தரத்தில் படமெடுக்கும் சில இயக்குநர்கள் உள்ளனர். அவர்கள் யாருடைய தலையீடும் இல்லாமல், தனித்து, படத்தின் முழு கட்டுப்பாட்டையும் தன் கைக்குள் வைத்திருக்கிறார்கள். ஷங்கர், ராஜமெளலி, ஏ.ஆர். முருகதாஸ் போன்ற இயக்குநர்களால் தமிழில் ஹாலிவுட் தரத்தில் படங்கள் எடுக்க முடியும். ஆனால் அந்த அளவுக்கு பணம் தர தயாரிப்பாளர்கள்தான் இல்லை.” என்று வழக்கமான தனது பஞ்ச்சை பக்குவமாக வைத்திருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.