Ilaiyaraaja Controversies : ஆண்டாள் கோவிலில் இளையராஜா அவமதிக்கப்பட்டது பூதாகரமாகி உள்ள நிலையில், இதற்கு முன் அவர் சந்தித்த சர்ச்சைகள் பற்றி பார்க்கலாம்.
ரசிகர்கள் இசைக்கடவுள் என கொண்டாடப்படுபவர் தான் இளையராஜா. அந்த கடவுளுக்கே கோவில் கருவறைக்குள் அனுமதி இல்லையா என்பது தான் தற்போது விவாதமாக உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள புகழ்பெற்ற ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த இளையராஜா, கோவில் கருவறைக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய முயன்றபோது, அவரை ஜீயர்கள் தடுத்து அங்கிருந்து வெளியேற்றிய சம்பவம் இன்று சோசியல் மீடியா முழுவதும் பேசு பொருள் ஆகி உள்ளது. இதற்கு முன் இளையராஜா சந்தித்த சர்ச்சைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு
சென்னையில் இளையராஜாவின் புத்தக வெளியீட்டு விழா நடந்தபோது அதில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த வாலி, இளையராஜாவை பார்க்கும் போது ரமண மகரிஷி போல் இருப்பதாக கூறி இருந்தார். இதையடுத்து பேச வந்த இளையராஜா, புத்தர், ஏசுவை விட ரமண மகரிஷி சிறந்தவர் என அதில் பேசி இருந்தார். பின்னர் கிறிஸ்தவர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கூறி அந்த சமயத்தில் இளையராஜாவுக்கு எதிராக போராட்டங்களும் வெடித்தன.
திருவாசகம் சர்ச்சை
undefined
இளையராஜா திருவாசகத்தை சிம்போனியாக தொகுத்து வழங்கியபோதும் சர்ச்சை எழுந்தது. அப்போது அவர் தன்னை இந்துத்துவவாதியாக காட்டிக்கொள்ளவே திருவாசகத்தை சிம்போனியாக உருவாக்கி இருக்கிறார் என எதிர்த்தனர்.
இதையும் படியுங்கள்... தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த இளையராஜா பாடல் இந்த தமிழ் பாடலா?
இளையராஜா - வைரமுத்து மோதல்
இளையராஜா இசையமைக்கும் பாடல்களின் பல்லவியை 99 சதவீதம் அவரே எழுதுவார் என்பது கோடம்பாக்கம் கிசுகிசுத்த ஒன்றாகும். தன்னை முன்னிருத்தி பாடல் வரிகளை இளையராஜா வைப்பதால் அதிருப்தி அடைந்தே வைரமுத்துவுக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த மோதல் பகையாக மாறி இன்றுவரை இருவரும் பேசிக்கொள்வதில்லை.
காப்பிரைட் சர்ச்சை
இளையராஜா தான் இசையமைத்த பாடல்களை தன்னிடம் அனுமதி பெறாமல் யாரும் பயன்படுத்த முடியாது என கூறுவதோடு, தன் பாடல்களை பயன்படுத்துவோருக்கு சட்டப்படி நோட்டீஸ் அனுப்புவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அண்மையில் மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழு கூட இந்த காப்பிரைட் சர்ச்சையில் சிக்கி இருந்தது.
எஸ்பிபி - இளையராஜா சண்டை
தன்னுடைய அனுமதி இல்லாமல் தனது பாடல்களை இசைக் கச்சேரிகளிலும் பாடக்கூடாது என இளையராஜா கண்டிஷன் போட்டார். அதுவும் தன்னுடைய உயிர் நண்பனான எஸ்பிபிக்கே அவர் அந்த உத்தரவை போட்டது தான் ஹைலைட். இதனால் இவர்கள் நட்பில் விரிசல் ஏற்பட்டு சில ஆண்டுகள் பேசாமல் இருந்தனர். ஆனால் எஸ்பிபி மறைவுக்கு சில வருடங்களுக்கு முன்னர் இருவரும் பகையை மறந்து மீண்டும் நண்பர்களாகினர்.
இதையும் படியுங்கள்... தொட்டதெல்லாம் ஹிட்டு; ராஜாவுக்கு கொட்டிய துட்டு! இளையராஜா சொத்து மதிப்பு இத்தனை கோடியா?