சூரியை தொடர்ந்து; பேரப்பிள்ளை தூக்க போகும் வயதில் ஹீரோ அவதாரம் எடுக்கும் காமெடி நடிகர்!

By manimegalai a  |  First Published Dec 16, 2024, 1:39 PM IST

பிரபல காமெடி நடிகர் பேர பிள்ளை தூக்க போகும் சமயத்தில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ள தகவல் தற்போது வெளியாகி, வைரலாகி வருகிறது.
 


காமெடி நடிகர்கள் அடுத்தடுத்து ஹீரோ அவதாரம் எடுத்து வரும் நிலையில், வடிவேலு, சந்தானம், யோகி பாபு, சூரி லிஸ்டில் தற்போது புதிய நடிகர் ஒருவர் இணைந்துள்ளார். அவர் வேறு யாரும் அல்ல விஜய் டிவி விஜய் டிவி ஸ்டாண்ட் அப் காமெடி மூலம் பிரபலமாகி, இப்போது பல படங்களில் நடித்து வரும் ரோபோ ஷங்கர் தான்.

எம்.ஏ.எக்கனாமிக்ஸ் வரை படித்திருந்தாலும், தன்னுடைய படிப்புக்கு கை நிறைய சம்பளம் தரும் வேலை வாய்ப்புகள் இருந்தாலும் கூட, சினிமா மீது ஏற்பட்ட காதல் தான், ரோபோ ஷங்கரை ஒரு நடிகராக மாற்றியது. விஜயகாந்த் நடிப்பில் 1997-ஆம் ஆண்டு வந்த 'தர்ம சக்கரம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான ரோபோ... கூட்டத்தோடு கூட்டமாக வந்து செல்லும் வேடங்களில் நடித்தார். படையப்பா படத்தில் கூட, அடியாட்களில் ஒருவராக வந்திருப்பார்.

Tap to resize

Latest Videos

அனால் இந்த படங்கள் இவரின் ஆசையை நிறைவேற்றியதே தவிர, திரையுலகில் இவருக்கான வாய்ப்புகளையோ... அல்லது பொருளாதார ரீதியாகவோ எந்த ஒரு முன்னேற்றத்தையும் ஏற்படுத்த வில்லை. பல படங்களில் குட்டி குட்டி கதாபாத்திரங்களில் நடித்து கொண்டிருக்கும் போது தான், விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்க போவது யாரு' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இவர் எதார்த்தமாக செய்த காமெடி ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவனிக்கப்பட்டதை தொடர்ந்து சில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய தர்ஷிகா விஷாலுக்கு கொடுத்த காதல் பரிசு; என்ன தெரியுமா?

தனுஷ், விஜய், அஜித், போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க துவங்கினார். இவர் நடித்த படங்களும் அடுத்தடுத்து ஹிட் அடித்தன. சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வந்த ரோபோ ஷங்கருக்கு கடந்த ஆண்டு மஞ்சள் காமாலை ஏற்பட்டு மிகவும் உடல் மெலிந்து, ஆளே அடையாளம் தெரியாமல் மாறினார். பின்னர் தன்னுடைய குடும்பத்தினர் துணையோடு அதில் இருந்து மீண்டு வந்தார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கூட, உடல் நிலை சரியில்லாமல் இருந்த போது யாரும் தன்னை கண்டுகொள்ளவில்லை. திரைப்படங்களில் நடிக்க வைக்க கூட முன்வரவில்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

மீண்டும் பழைய ஃபாமுக்கு வந்துள்ள ரோபோ ஷங்கர், திரைப்படங்களில் ஒரு பக்கம் காமெடி வேடத்தில் நடித்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் இவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படமும் பரபரப்பாக எடுக்கப்பட்டு வருகிறது.  அதன்படி ரோபோ சங்கர் தற்போது 'அம்பி' என்ற படத்தில் தான் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தை டி2 மீடியா என்கிற நிறுவனம் சார்பில் பிரசாந்தி பிரான்சிஸ் என்பவர் தயாரிக்கிறார். ஜே. எல்வின் இந்த படத்தை இயக்குகிறார். ரோபோ சங்கருக்கு ஜோடியாக அஸ்வினி சந்திரசேகர் நடித்து வருகிறார்.

மேலும் முக்கிய வேடத்தில், ரமேஷ் கண்ணா, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, மோகன் வைத்யா, கோவை பாபு, நமோ நாராயணாஉள்பட பலர் நடித்து வருகிறார்கள். காமெடி கதைக்களத்தில் இந்த படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

Keerthy Suresh: ஒரே நாளில் இரண்டு திருமணம் செய்துகொண்ட கீர்த்தி சுரேஷ்! வைரல் போட்டோஸ்!

ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவுக்கு திருமணம் ஆகி அவர் 7 மாதம் கர்ப்பமாக உள்ள நிலையில்... இப்போது தான் ரோபோவுக்கு ஹீரோ வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்னும் சில மாதங்களில் தாத்தாவாகும் ரோபோவுக்கு இப்போது ஹீரோ வாய்ப்பும் கிடைத்துள்ளதால் குடும்பத்தினர் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!