விக்கியை கல்யாணம் பண்ணியதால் குற்ற உணர்ச்சியில் இருக்கேன் - நயன்தாரா ஓபன் டாக்

By Ganesh A  |  First Published Dec 16, 2024, 12:16 PM IST

Nayanthara About Vignesh Shivan : லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, தன்னால் தனது கணவர் விக்னேஷ் சிவன் ட்ரோல் செய்யப்படுவது குறித்து மனம்திறந்து பேசி உள்ளார்.


சிம்பு, பிரபுதேவா உடனான காதல் தோல்விக்கு பின்னர் நடிகை நயன்தாரா காதலித்த நபர் தான் விக்னேஷ் சிவன். சிம்புவின் போடா போடி படத்தை இயக்கி முடித்ததும் நயன்தாராவை சந்தித்து தன்னுடைய அடுத்த படமான நானும் ரெளடி தான் படத்துக்காக கதை சொல்ல சென்றிருக்கிறார் விக்கி. அப்போது அவரைப் பார்த்ததும் நயன்தாராவுக்கு கிரஷ் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. நானும் ரெளடி தான் பட ஷூட்டிங் சமயத்தில் இருவரிடையேயான காதல் தீவிரமடைந்தது.

இதையடுத்து சில ஆண்டுகள் லிவ்விங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த விக்கி - நயன் ஜோடி கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். விக்னேஷ் சிவன் என்றாலே அவர் ஒரு இயக்குனர் என்பதை விட நயன்தாராவின் கணவராக தான் பலருக்கும் தெரியும். தன்னை திருமணம் செய்துகொண்டதால் விக்கிக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதைப்பற்றி நயன்தாராவே சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... அது நான் இல்லைங்க; அரசு சொத்தை விலைக்கு கேட்ட விவகாரம்! விளக்கம் கொடுத்த விக்கி

இதுபற்றி ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது : “நாங்கள் இருவரும் சேராமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என சில நேரங்களில் நான் நினைத்திருக்கிறேன். இன்றும் நான் குற்ற உணர்வோடு தான் இருக்கிறேன். ஏனெனில் நான் தான் அவரை உறவுக்குள் இழுத்தேன். நான் அவரது வாழ்க்கையில் இல்லை என்றால் அவருக்கேன தனியாக பெயர் கிடைத்திருக்கும். இயக்குனர், பாடலாசிரியர், எழுத்தாளர் என அவருக்கு கிரெடிட் கொடுத்திருப்பார்கள்.

விக்கி ஒரு நல்ல மனிதர். அவரைப்போல இருக்க முடியுமானு எனக்கு தெரியல. ஒருவர் மீதுள்ள அன்பும், மரியாதையும் அவர்கள் எதிர்கொள்ளும் நெகடிவிட்டியால் காணாமல் போகிறது. சமமாக வெற்றி பெற்றவர்களே திருமணம் செய்ய வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் நாங்கள் வெற்றியையோ, ஆடம்பரத்தையோ, செல்வாக்கையோ தேர்ந்தெடுக்கவில்லை. அன்பை மட்டுமே அடிப்படையாக கொண்டது எங்கள் உறவு.

என்னைவிட லேட்டாக தான் விக்கி தன் கெரியரை தொடங்கினார். அதனால் தான் ட்ரோல்களும் வருகிறது. நான் ஏற்கனவே சக்சஸ்புல்லாக இருப்பதால் என்னையும் அவரையும் ஒப்பிட்டு பேசுவது நியாயமற்றது என உணர்கிறேன் என எமோஷனலாக பேசி இருக்கிறார் நயன்தாரா.

இதையும் படியுங்கள்... வயசானாலும் இளமையோடு இருக்கும் நயன்தாரா-வின் டயட் சீக்ரெட்

click me!