இளையராஜா வெளியேற்றம்; ஆண்டாள் கோவிலில் ஜீயர்கள் செயலால் வெடித்த சர்ச்சை!

By Ganesh A  |  First Published Dec 16, 2024, 8:35 AM IST

Ilaiyaraaja at Srivilliputhur Andal Temple : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறைக்குள் இளையராஜா சென்றபோது, அவரை ஜீயர்கள் வெளியே அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


அன்னக்கிளி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. இவர் 45 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமா ரசிகர்களை தன்னுடைய இசையால் கட்டிப்போட்டு வைத்துள்ளார். தற்போது இளையராஜாவுக்கு வயது 80ஐ கடந்துவிட்டாலும் அவர் இன்றளவும் பிசியான இசையமைப்பாளராக வலம் வருகிறது. அவரது இசையில் தற்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. இப்படம் வருகிற டிசம்பர் 20ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள புகழ்பெற்ற ஆண்டாள் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த இளையராஜா அங்கு சென்று சாமி தரிசனமும் செய்திருந்தார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இளையராஜாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து பெரிய பெருமாள் சன்னதி, நந்தவனம், ஆண்டாள் சன்னதி ஆகியவற்றிற்கு சென்று சாமி தரிசனம் செய்தார் இளையராஜா. அப்போது ஆண்டாள் கோவில் கருவறைக்கு முன்புள்ள அர்த்த மண்டபத்திற்குள் செல்ல முயன்ற இளையராஜாவை அங்குள்ள ஜீயர்களும், பக்தர்களும் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது. 

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... எந்த ட்யூன் போட்டாலும் நோ சொன்ன இயக்குனர்! இளையராஜா செய்த சம்பவம்! எவர்க்ரீன் ஹிட்டான பாடல்!

வரவேற்பில் விதிமீறல் இருப்பதாக கூறி அங்கிருந்து அவர்கள் இளையராஜாவை வெளியேற்றியுள்ளனர். இதையடுத்து கோவில் அர்த்த மண்டபத்தில் இருந்து வெளியே வந்த இளையராஜா சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவருக்கு அங்குள்ள அர்ச்சகர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அர்த்த மண்டபத்தில் இருந்து இளையராஜா வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருவதோடு, இதுதான் சனாதனம் எனவும் சாடி வருகின்றனர்.

undefined

நேற்று திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்ய வந்த அம்மாவட்ட கலெக்டர் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இன்று அதே நிலை இசைஞானி இளையராஜாவுக்கு ஏற்பட்டு இருக்கிறது. அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் அர்த்த மண்டபத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது தான் தற்போது சோசியல் மீடியாவில் பேசுபொருள் ஆகி உள்ளது. இந்த விவகாரம் விரைவில் பூதாகரமாக வெடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

இதையும் படியுங்கள்... ரஜினிக்காக இளையராஜா விசிலடித்தே உருவாக்கிய எவர்கிரீன் ஹிட் பாடல் பற்றி தெரியுமா?

click me!