நடிகர் சங்க தேர்தலில் அரசியல் தலையீடா..? கருணாஸ் பரபரப்பு தகவல்..!

By vinoth kumarFirst Published Jun 16, 2019, 4:12 PM IST
Highlights

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் அரசியல் தலையீடு ஏதுமில்லை என்று திருவாடானை எம்.எல்.ஏ. கருணாஸ் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் அரசியல் தலையீடு ஏதுமில்லை என்று திருவாடானை எம்.எல்.ஏ. கருணாஸ் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், தற்போதைய தலைவர் நாசர் தலைமையில் பாண்டவர் அணியும், நடிகர் பாக்யராஜ் தலைமையில் சங்கரதாஸ் அணி என மற்றொரு அணியும் போட்டியிடுகிறது. இந்நிலையில் இரு அணிகளும் தங்கள் சங்கத்துக்காக, தமிழகம் முழுக்க உள்ள நாடக நடிகர்களின் வாக்குகளைக் குறிவைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்நிலையில் திருச்சியில் நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில், நடிகர் சங்க தலைவர் நாசர், துணை தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நாடக நடிகர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய கருணாஸ், பாண்டவர் அணி சார்பில் அளித்த வாக்குறுதிகளை காப்பாற்றி வருவதாக தெரிவித்தார். 

பின்னர், கூட்டத்தில் பேசிய நடிகர் நாசர், கடந்த தேர்தல் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஆனால், இந்தத் தேர்தல் சுமுகமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நேரத்தில், முதல் நாள் இரவு வரை நம்முடன் இருந்தவர்கள் வேறு அணிக்குச் சென்றதால் இது சவாலான தேர்தலாக மாற்றப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடாத முன்னாள் நிர்வாகி ஒருவர், இந்தத் தேர்தலை ஆட்டுப் புழுக்கை தேர்தல் என விமர்சிக்கிறார். நாங்கள் ஆட்டுப் புழுக்கைதான், நடிகர் சங்க வளர்ச்சிக்கு நாங்கள் நல்ல உரமாக இருப்போம் என கூறினார்.

click me!