
பிரபலமாக மக்களால் பார்க்கப்படும் அனைவருமே வெள்ளித்திரையில் தோன்றும் வாய்ப்பு கிடைத்தால் அதனை பயன்படுத்தி கொள்கிறார்கள். அந்த வகையில், விளம்பர படங்கள் மூலம் தோன்றி அசத்தி வந்த, சரவணா ஸ்டார் அண்ணாச்சி இப்போது வெள்ளித்திரைக்கு வர உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இவரை திரைப்படங்களில் நடிக்க வைக்க சிலர் முயற்சித்து வருவகாகவும், இவர் நடித்தால் நயன்தாராவுடன் தான் நடிப்பேன் என கூறியதாக கூட தகவல்கள் பரவியது என்பது நாம் அறிந்தது தான்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, தற்போது ரூ.30 கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தை இவரே தயாரித்து நடிக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. இந்த படத்தை அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய ஜுடி-ஜெர்ரி இயக்கவுள்ளதாக உள்ளதாகவும், இவருக்கு ஜோடியாக வட இந்தியாவின் முன்னணி நடிகை ஒருவர் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இப்படம் அனைத்து அம்சங்களும் கொண்ட கருத்துள்ள படமாக உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது படம் குறித்த அதிகார பூர்வ அறிவிப்புகள் வெளியானால் மட்டுமே தெரியவரும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.