‘அதுக்கு லாரன்ஸ் மாஸ்டர் மட்டுமே சரியான ஆளு’...சர்டிபிகேட் தரும் இந்தி நடிகை...

Published : Jun 16, 2019, 03:48 PM IST
‘அதுக்கு லாரன்ஸ் மாஸ்டர் மட்டுமே சரியான ஆளு’...சர்டிபிகேட் தரும் இந்தி நடிகை...

சுருக்கம்

‘நடுவில் தயாரிப்பாளருடன் மனக்கசப்பு ஏற்பட்டு லட்சுமி பாம் படத்தை விட்டு லாரன்ஸ் மாஸ்டர் விலகியபோது நான் மனதார உடைந்துபோய்விட்டேன். நமக்கு கிடைக்கவிருக்கும் ஒரு சூப்பர்ஹிட் படத்துக்கா இந்த சோதனை வரவேண்டும்? என நினைத்தேன்’ என்கிறார் இந்தி நடிகை கியாரா அத்வானி.  

‘நடுவில் தயாரிப்பாளருடன் மனக்கசப்பு ஏற்பட்டு லட்சுமி பாம் படத்தை விட்டு லாரன்ஸ் மாஸ்டர் விலகியபோது நான் மனதார உடைந்துபோய்விட்டேன். நமக்கு கிடைக்கவிருக்கும் ஒரு சூப்பர்ஹிட் படத்துக்கா இந்த சோதனை வரவேண்டும்? என நினைத்தேன்’ என்கிறார் இந்தி நடிகை கியாரா அத்வானி.

தமிழில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற காஞ்சனா படத்தை ஹிந்தியில் ‘லட்சுமி பாம்ப்’ என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார்கள்.இப்படத்தை தமிழில் எழுதி இயக்கி மாபெரும் வெற்றிப் படமாக்கிய ராகவா லாரன்ஸ் தான் ஹிந்தியிலும் இயக்குகிறார்.

சில வாரங்களுக்கு முன்பு நடந்த ஒரு சின்ன மனக்கசப்பில் இந்தப் படத்தை தான் இயக்கவில்லை என்று லாரன்ஸ் அறிவித்தார். அவர் அறிவித்த உடனே
படக் குழுவினரும், படத்தின் கதாநாயகன் அக்ஷய் குமாரும் ராகவா லாரன்ஸுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அவர்களின் அன்பை ஏற்ற லாரன்ஸ் மீண்டும் படத்தை இயக்க ஆயத்தமானார்.

மறுபடியும் இயக்குநர் பொறுப்பை லாரன்ஸ் ஏற்றுக்கொண்டது படக்குழுவை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அது தொடர்பாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நடிகை கியாரா “அவர் மறுபடியும் இப்படத்தை இயக்க ஒப்புக் கொள்வார் என்று நம்பி காத்திருந்தேன். அவரும் அப்படியே சம்மதித்தார். அவரே இப்படத்தை இயக்க மிகச் சிறந்த நபர். ஏனென்றால் அவர் இப்படத்தின் ஒரு பகுதியை இயக்கி முடித்து விட்டார். மீதியை யார் இயக்கினாலும் அது சரியாக இருக்காது.

மேலும் லாரன்ஸ் மாஸ்டர் ஆச்சர்யம் நிறைந்த ஒரு அற்புதமான மனிதர். இப்படத்தை தமிழில் அவரே இயக்கி நடித்தும் இருக்கிறார். மக்களும் படத்தைக் கொண்டாடி இருக்கிறார்கள். ஆக இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் அவரது விலை மதிப்பில்லா சொத்து என்று தான் சொல்ல வேண்டும்.
இப்போது நாங்கள் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ஆவலோடு காத்திருக்கிறோம்” என்றார் கியரா

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிறிஸ்தவர், இஸ்லாமியர் கொடுத்த பணத்தில் தாலி வாங்கினேன்: நடிகர் ஸ்ரீனிவாசன் உருக்கம்!
லிங்குசாமி கை*து ஆகல! அது தவறான செய்தி, சகோதரரும், வழக்கறிஞரும் சொன்ன முக்கிய தகவல்.....