ரஜினிகாந்தை சுளுக்கெடுக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்: ’இப்படி எந்த இயக்குநரும் என்னை படுத்துனது இல்ல!’ நொந்து போன சூப்பர் ஸ்டார்.

By Vishnu PriyaFirst Published Nov 11, 2019, 6:57 PM IST
Highlights

ஆக முற்றுப்புள்ளி வைக்க முடிவு கட்டிய ரஜினி தன் நடிப்பு பயணத்துக்கு கமா போட்டார். பாபாவுக்கு பிறகு செம்ம மாஸ் ஆக பல படங்கள் செய்து இன்றளவும் திரையுலகத்தை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார்.

ரஜினிகாந்தை சுளுக்கெடுக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்:    ’இப்படி எந்த இயக்குநரும் என்னை படுத்துனது இல்ல!’ நொந்து போன சூப்பர் ஸ்டார்.

பாபா! படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் திரையுலகத்தை விட்டே விலகப்போகிறார்! எனும் பரபரப்பு எழுந்தது. காரணம், ரஜினிக்கு வயதாகிவிட்டதை மிக முழுமையாக உணர்த்திய சினிமா அது. அப்படத்தில் அவரது தோற்றம் அவ்வளவு டல்லாக இருந்தது. மேலும் பாட்டாளி மக்கள் கட்சி அந்தப் பட ரிலீஸின் போது கொடுத்த மிக மூர்க்கமான குடைச்சல்களும் ரஜினியின் மனதை சோர்வடையை வைத்து, ‘போதும் நடிப்பு’ எனும் நிலையை எடுக்க வைத்தது.

இந்த தகவல் பொய்யில்லை என்பதற்கு, கடந்த வெள்ளியன்று சென்னையில் இயக்குநர் பாலசந்தரின் சிலை திறப்பு விழாவில் கமலின் பேச்சே ஆதாரம். ரஜினி சினிமாவை விட்டு ஒதுங்க நினைத்ததாகவும், கமல் சண்டை போட்டு அவரை தக்க வைத்ததையும் வெளிப்படையாக சொல்லிக் காட்டினார். 

ஆக முற்றுப்புள்ளி வைக்க முடிவு கட்டிய ரஜினி தன் நடிப்பு பயணத்துக்கு கமா போட்டார். பாபாவுக்கு பிறகு செம்ம மாஸ் ஆக பல படங்கள் செய்து இன்றளவும் திரையுலகத்தை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், இப்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஷூட்டிங் முடிந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் துவங்கியுள்ளன. இந்த நிலையில்தான் ‘என்னை எந்த இயக்குநரும் இந்தளவுக்கு படுத்தி எடுத்தது இல்லை.’ என்று முருகதாஸ் பற்றி கமெண்ட் அடித்திருக்கிறார் ரஜினி. 

முருகதாஸ் எப்பவுமே சற்று குவாலிட்டியான படைப்புகளை உருவாக்குபவர். ’இளம் இயக்குநர்களின் கதைகளை நைஸாக உருவி, அதை பட்டி டிங்கரிங் பார்த்து இயக்குபவர்’ எனும் விமர்சனம் இவர் மீது உண்டு. விஜய்யை வைத்து இவர் இயக்கிய ‘சர்கார்’ படத்தில் இந்த விமர்சனமானது உண்மையுமானது. இந்த நிலையில்தான் ரஜினிகாந்த் இவரது தர்பார் படத்தில் கமிட் ஆனார். இதில் ரஜினிக்கு போலீஸ் அதிகாரி வேடம். பாலிவுட் ஹீரோ சுனில் ஷெட்டி, நயன் தாரா, யோகிபாபு என்று செம்ம காம்போ இந்தப் படத்தில் இருக்கிறது. 

போலீஸ் அதிகாரி வேடம் என்பதால் இந்தப் படத்தில் ரஜினிக்கு செம்ம ஆக்‌ஷன் சீக்வென்ஸ்கள் இருக்கின்றன. நன்கு வயதாகிவிட்ட நிலையில் இது தெரிந்துதான் கமிட் ஆனார் ரஜினி. ஆனால் ஆக்‌ஷன் பிளாக்குகள் எடுக்கையில்தான் தெரிந்தது இது செம்ம ரிஸ்க் என்று. ராம் லக்‌ஷ்மண்! பீட்டர் ஹெய்ன்! என மூன்று ஸ்டண்ட் இயக்குநர்களை இந்தப் படத்தின் ஆக்‌ஷன் பிளாக்குகளுக்காக பயன்படுத்தியுள்ளார் முருகதாஸ். 

அவர்கள் ரஜினியை பிழிந்தெடுத்துவிட்டனர். வயதான மனிதரான ரஜினி இந்தப் படத்துக்காக பெரிதாய் மெனெக்கெட்டிருக்கிறார் என்பதை இப்படத்தின் ‘ஆக்‌ஷன் லுக்’ ஒன்றே சொன்னது. கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் பனியனில் ரஜினி ஒர்க் அவுட் செய்வது போன்ற போஸ் அது. அந்த லுக் பெரும் வரவேற்பைப் பெற்றதை விட ‘ஒரு வயதான மனிதரை ஏன் இப்படி படுத்துறீங்கப்பா?’ என்று விமர்சனத்தையே சம்பாதித்தது. 

இந்த நிலையில் ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளன. வரும் 15-ம் தேதி துவங்கும் டப்பிங்கை ஒரே சிட்டிங்கில் முடித்து தர ரஜினிக்கு அன்பான கட்டளையிட்டுள்ளார் முருகதாஸ். ரஜினியும் ஒரு வழியாக ஒப்புக் கொண்டுவிட்டாராம். 
‘ஷுட்டிங்லதான் என்னை பின்னி, பிழிஞ்சு எடுத்தார். இப்ப டப்பிங்லேயும் படுத்தி எடுக்க பிளான் பண்ணிட்டார். எந்த டைரக்டரும் இந்தளவுக்கு என்னை பண்ணுனதேயில்லை. ஹ்ஹா! ஹா!’  என்று தனது டிரேட் மார்க் சிரிப்புடன் ‘தர்பார்’ டீமிடம் சொல்லியிருக்கிறார் சூப்பர் ஸ்டார். 

-    விஷ்ணுப்ரியா

click me!