
நடிகை நிவேதா பெத்துராஜ், தற்போது ஃபார்முலா ஒன் கார் பயிற்சியில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவர் முதல் நிலையை வெற்றிகரமாக முடித்து விட்டு சான்றிதழ் பெற்றுள்ள தகவல் வெளியாக பலர் இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
நடிகைகள் பலர் சமீப காலமாக நடிப்பை தாண்டி, ஓவியம், விளையாட்டு போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். இப்படி இவர்கள் மேற்கொள்ளும் பயிற்சிகள் வருங்காலத்தில், இந்த விளையாட்டு துறை குறித்து எடுக்கும் படங்களில் நடிக்க வசதியாக இருக்கும் என்பதையும் நம்புகிறார்கள். அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வில் - விளையாட்டில் கவனம் செலுத்தி வருகிறார். இவரை தொடர்ந்து தற்போது நடிகை நிவேதா பெத்துராஜ் ஃபார்முலா ஒன் கார் ஓட்டுவதில் கவனம் செலுத்தி வருவது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழில் 'ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன்பிறகு ஜெயம் ரவியுடன் 'டிக் டிக் டிக்' விஜய் சேதுபதியுடன் 'சங்க தமிழன்', பிரபுதேவாவுடன் 'பொன்மாணிக்க வேல்'உள்ளிட்ட படங்களில் நடித்து, வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
இந்நிலையில் இவருக்கு ஃபார்முலா ஒன் ரேஸ் பயிற்சி மேற்கொள்வதில் ஆர்வம் ஏற்படவே, அதனை முழுமூச்சுடன் கற்று வந்தார். மேலும் இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். தற்போது இவர் இந்த பயிற்சியில் முதல் நிலையை முடித்துவிட்டதற்கான சான்றிதழ் பெற்றுள்ளார். இதுகுறித்த புகைப்படத்தையும், நிவேதா பெத்து ராஜ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.