ஆர்யாவின் 'சார்பட்டா பரம்பரை' ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published : Jul 12, 2021, 04:23 PM IST
ஆர்யாவின் 'சார்பட்டா பரம்பரை' ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சுருக்கம்

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடித்திருக்கும் 'சார்பட்டா பரம்பரை' படம் ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரைலர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.  

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடித்திருக்கும் 'சார்பட்டா பரம்பரை' படம் ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரைலர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆர்யாவின் 30வது படமாக உருவாகியுள்ள 'சார்பட்டா' படத்திற்காக மிக கடுமையான உடல் பயிற்சிகள் செய்து, நடித்துள்ளார் ஆர்யா. இவர் மட்டும் இன்றி, இவருடன் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் பல்வேறு கடுமையான உடல் பயிற்சிகள் மற்றும் பாக்ஸிங் கற்று கொண்டுதான் நடித்துள்ளனர். இந்த படத்தை 'மெட்ராஸ்', 'காலா', 'கபாலி' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குகிறார். கே 9 ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. ஆர்யா, இப்படத்தில்...  வடசென்னை வாலிபராகவும், பாக்ஸராகவும் நடித்துள்ளார்.

இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, விரைவில் டிரைலர் வெளியாக போகிறது என்பதை தெரிவிக்கும் விதமாக, 'சார்பட்டா' படத்தின் மேக்கிங் வீடியோவை கடந்த மார்ச் மாதம் வெளியானது.இந்த வீடியோவில் ஒவ்வொருவருடைய கதாப்பாத்திரம் குறித்தும், படக்குழு விளக்கியுள்ளது. இந்த படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவரும், எவ்வளவு கடுமையாக படத்திற்காக உழைத்துள்ளனர் என்பதும் தெரிகிறது.

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக, படங்கள் தொடர்ந்து ஓடிடி தளத்தில் வெளியாகிவரும் நிலையில், 'சார்பட்டா பரம்பரை' படத்தையும் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக, அமேசான் ஓடிடி தளத்தில் படம் ஜூலை 22 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இந்த படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் நாளை 'சார்பட்டா பரம்பரை' படத்தின் ட்ரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மாற்றப்படும் பராசக்தி ரிலீஸ் தேதி... ஜனநாயகனை காலி பண்ண என்னென்ன பண்றாங்க பாருங்க..!
அய்யய்யோ மீனா கண்டுபிடிச்சிட்டாளே... சீட்டிங் பண்ணி சிக்கிய ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்