
பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் தாகூர் மது வழங்க, பிக்சல் ஸ்டுடியோவின் கீழ் புவன் மற்றும் ஸ்ரீகர் ஆகியோர் தயாரிப்பில். #நிகில் தன்னுடைய 20-வது படத்தை நடித்து வருகிறார். இந்த படத்திற்கு படத்திற்கு 'சுயம்பு' என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
'சுயம்பு' என்றால் 'தானாக பிறந்தது‘ அல்லது 'தன் சொந்த விருப்பத்தால் உருவாக்கப்பட்டது' என அர்த்தம். முதல் பார்வை போஸ்டரில் நிகில் போர்க்களத்தில் ஒரு மூர்க்கமான வீரராக உள்ளார். ஒரு வழக்கமான போர் வீரனைப் போல நீண்ட கூந்தலைக் கொண்டு, ஒரு கையில் ஆயுதம் (ஈட்டி) மற்றும் மற்றொரு கையில் கேடயத்துடனும் உள்ளார். இந்தப் படத்திற்காக அவரது தோற்றம் குறிப்பிடத்தகுந்ததாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
'மாமன்னன்' ஆடியோ லான்ச்சிக்கு ஹாட்டாக சேலையில் வந்த கீர்த்தி சுரேஷ்!
இது ஒரு தனி மனிதனின் காவியமாக, ஒரு பேரரசின் பொற்காலத் தொடக்கமாக உருவானதையும் கூறுகிறது. மேலும், நிகில் 'தி லெஜண்டரி வாரியர்' என்று இதில் அறிமுகப்படுத்தப்படுகிறார்.
தற்போது வெளியாகியுள்ள முதல் பார்வை மற்றும் கான்செப்ட் வீடியோ, போர் வீரரின் காவிய படைப்பாக வெளிவர இருக்கிறது என்பதைக் குறிக்கிறது. இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ள இந்தப் படத்திற்கு இப்போதிருந்தே ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை படக்குழு உருவாக்கி வருகிறது.
'மாமன்னன்' இசை வெளியீட்டு விழாவிற்கு மாஸாக... கோட் - சூட்டில் வந்த உலகநாயகன்!
நிகிலின் சினிமா பயணத்தில் அதிக பொருட்செலவில் உருவாகும் படம் 'சுயம்பு'. இது சிறந்த தொழில்நுட்ப தரத்துடன் உருவாக்கப்படுகிறது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். எம் பிரபாகரன் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், வசனங்களை வாசுதேவ் முனேப்பகரி எழுதியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.