
மரகத நாணயம் திரைப்படம் சாகசம் மற்றும் காமெடி கலந்த கற்பனை படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் ஆதி நடித்துள்ளார், கதாநாயகியாக ஏற்கனவே ஆதியுடன் யாகாவாராயினும் நாகாக்க படத்தில் நடித்த நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.
மேலும் ஆனந்த் ராஜ், டேனியல், ராம்தாஸ், அருண்ராஜா காமராஜ் என
பல நடிக்கிறார்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஏஆர்கே சரவணன் இயக்கியிருக்கிறார்.
இந்த படத்தில்ப நடித்த அனுபவம் குறித்து நிக்கி கல்ராணி கூறும்போது, "மரகத நாணயம் என்னை மிகவும் கவர்ந்து விட்டது. படத்தின் ரிலீஸை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன் என கூறினார்.
சிறு வயதிலிருந்தே நான் விரும்பி, ரசித்து பார்க்கும் ஃபேண்டஸி வகைப் படங்களில் நானும் நடித்திருக்கிறேன் என நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாகவும், வானத்தில் பறப்பது போலவும் உணர்கிறேன்.
என் கதாப்பாத்திரம் மிகவும் புதுமையாக இருக்கும். நல்ல திரைக்கதை மற்றும் கதை சொல்லலுடன் சிறப்பாக உருவாகி இருக்கும் இப்படத்தை ரசிகர்கள் மிகவும் ரசிப்பதோடு, அவர்களின் பாராட்டு மற்றும் ஆதரவையும் மரகத நாணயம் படக்குழுவுக்கு வழங்குவார்கள் என நம்புகிறேன்" என்றார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.