ஹிப் ஹாப் தமிழாவின் படம் வரிவிலக்கு சலுகையை பெறுமா?

 
Published : Jun 15, 2017, 05:05 PM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
ஹிப் ஹாப் தமிழாவின் படம் வரிவிலக்கு சலுகையை பெறுமா?

சுருக்கம்

Will the Hip Hop Tamil movie get a tax free offer?

விஷால் நடித்த 'ஆம்பள' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் ஒரு இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ளார். தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மிகப் பிரபலமடைந்தவர். இந்த நிலையில் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் வரிசையில் ஆதியும் ஹீரோவாகி 'மீசையை முறுக்கு' என்ற படத்தில் நடித்துள்ளார்.

ஆதி இயக்கி, இசையமைத்து நடித்துள்ள இந்த படத்தில் ஆத்மிகா,விவேக், விஜயலட்சுமி உள்பட பலர் நடித்துள்ளனர். சுந்தர் சி இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படம் தற்போது சென்சாருக்கு சென்று 'யூ'சான்றிதழ் பெற்றுள்ளது. இதனால் இந்த படத்திற்கு தமிழக அரசின்30% வரிவிலக்கு சலுகை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

ஆனால் அதே நேரத்தில் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வருகிறது. இந்த வரி அமலுக்கு வந்துவிட்டால் அதன்பின்னர் தமிழக அரசின் வரிவிலக்கு சலுகை இருக்காது.

எனவே இன்னும் இருக்கும்17 நாட்களுக்குள் ஹிப் ஹாப் தமிழாவின் இந்த படம் வரிவிலக்கு சலுகையை பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்தப் படத்தில் சேட் ஜி சேட் ஜி என்ற பாடல் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே நல வரவேற்பை பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜே சித்ராவைத் தொடர்ந்து... நடிகை ராஜேஸ்வரியின் விபரீத முடிவு: திரையுலகைத் தாக்கும் மரண அலை!
கடையில் காசு பணத்தை ஆட்டைய போட்டாரு இவரு: மாமனாரை பற்றிய உண்மையை சொன்ன சரவணன்!