
சன் டிவி செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகரும், சீரியல் நாயகன் நவீன் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்களாம். இது தொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமா பிரபலங்களை போன்று, தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், செய்திவாசிப்பாளர்கள் சமீப காலமாக ட்ரெண்ட் அடித்து வருகின்ற்னர். முன்னதாக சன் டிவி செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா, பிரபலம் அடைந்து தனக்கென ரசிகர்களை பெற்றார். திருமணத்திற்கு பிறகு பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ் பெற்றார்.தற்போது அவர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
அந்த வரிசையில், சன் டிவி செய்தி வாசிப்பாளராக களம் இறங்கிய கண்மணி, தமிழில் ஜெயா நியூஸ், நியூஸ் 18 உள்ளிட்ட முன்னணி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இவருடைய தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக உள்ளதால் இவரது செய்திகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும், அவ்வப்போது புகைப்படம் வெளியிடுவார்.
இந்த நிலையில், நேற்று சீரியல் நடிகர் நவீன் தான் செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகரை காதலிப்பதாக அவருடன் எடுத்த புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இதயத்தை திருடாதே தொடரில் சிவா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும், சிலர் இவர்க்ளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
முதன்முதலாக மலையாளத்தில் மணிரத்னம், என்ற படம் மூலம் நாயகனாக நடித்த தொடங்கியுள்ளார்.பின் தமிழில் மசாலா படம், பூலோகம், மாயவன், மிஸ்டர் லோக்கல் படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.