அடக்கடவுளே..பாக்ஸ் ஆபீஸில் படு அடிவாங்கிய வலிமை...செகண்ட் வீக்கில் இவ்ளோ தானா?..

By Kanmani PFirst Published Mar 8, 2022, 2:43 PM IST
Highlights

முதல் வாரத்தில் படு தூளாக வசூலை வாரிக்குவித்த அஜித்தின் வலிமை..இரண்டாவது வார இறுதியில் மிகக்குறைந்த  வசூலை ஈட்டி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை'யை தொடர்ந்து இயக்குனர் வினோத் மீண்டும் அஜித் குமாரை வைத்து இயக்கிய வலிமை 2 அரை வருட காத்திருப்பிற்கு பிறகு சமீபத்தில் வெளியாகி மாஸ் காட்டியது...போனி கபூர் தயாரிப்பில் உருவான இந்த படம் ரசிகர்களை பல நாட்கள் காத்திருந்தனர். அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் என பலரிடமும் கோரிக்கை விட்டதை தொடர்ந்து அப்டேட்டுகள் ஒன்றொன்றாய் வெளியானது. மாஸ் பீஜியமுடன் வெளியான சிங்கிள், ட்ரைலர் என மாஸ் பறந்தது. பைக்கர்ஸ் ஸ்டண்ட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

இதையடுத்து கடந்த பொங்கல் பரிசாக படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீர் கொரோனா பரவலால் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்த அறிவிப்பால்  அரசிகர்கள் மிகுந்த வருத்தத்திற்கு அழகி இருந்தனர். இதையடுத்து கடந்த 24-ம் தேதி படம் வெளியாகும் என அறிவித்தபடி தடபுடலாக வெளியானது. வலிமை ரிலீசுக்கு முன்னரே ப்ரீ புக்கிங் மூலம் பெரும்பாலான  திரையரங்குகள் ஹவுஸ்புல் ஆனது.

முதல் நாள் மட்டுமல்ல அடுத்த சில நாட்களுக்கு டிக்கெட் கிடைப்பது மிக கடினமான ஒன்றாக இருந்தது. சில திரையரங்குகளில் டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்படுவதாக  புகாரும் எழுந்தது. முதல் வாரத்தில் 100 கோடியை வலிமை வசூல் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஆனால் படம் வெளியாவதற்கு முன் இருந்த விறுவிறுப்பு வலிமை ரிலீஸுக்கு பிறகு மெல்ல மெல்ல குறைய துவங்கியது. முதல் நான்கு நாட்கள் நல்ல பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்சனை பெற்ற வலிமை வசூல் நான்காம் நாளிலிருந்து சரிய துவங்கியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...மனைவியுடன் ராதிகாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூர்யா..என்ன விசயம் தெரியுமா?...

முதல் வாரத்தில் ரூ.133. 47 கோடியை பெற்ற வலிமை. இரண்டாம் வாரத்தின் முதல் நாளில் ரூ.3.42 கோடியும், 2 நாளில் ரூ.3.60, 3 நாளில் ரூ.4.15 கோடியும், 4 -ம் நாளில் ரூ.5.03 கோடியும், 5 -ம் நாளில் ரூ. 0.81 கோடி என  இரண்டாம் வார முடிவில் சுமார் ரூ. 17.01 என மொத்தம்  ரூ.150.48 கோடியை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

click me!