THALAPATHY66: தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் ஓ சாமி பாடல்'' புகழ் ராஷ்மிகா.! படு குஷியில் ரசிகர்கள்..!

Anija Kannan   | Asianet News
Published : Mar 08, 2022, 02:12 PM ISTUpdated : Mar 08, 2022, 03:06 PM IST
THALAPATHY66: தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் ஓ சாமி பாடல்'' புகழ் ராஷ்மிகா.! படு குஷியில் ரசிகர்கள்..!

சுருக்கம்

THALAPATHY66: தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களுள் மிக முக்கியமானவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் அடுத்து தயாராக இருக்கும் 66வது திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக  நடிகை ராஷ்மிகா மந்தனா கமிட் ஆகி இருக்கிறார். 

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களுள் மிக முக்கியமானவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் அடுத்து தயாராக இருக்கும் 66வது திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக  நடிகை ராஷ்மிகா மந்தனா கமிட் ஆகி இருக்கிறார். 

நெல்சன் இயக்கத்தில் விஜய், செல்வராகவன், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அனிருத் (Anirudh) இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே என்பவர் நடித்திருக்கிறார். 

அரபிக் குத்து பாடல் மாஸ் ஹிட்:

இவர்களுடன் பல்வேறு நகைச்சுவை பட்டாளங்கள் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளது. னோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படம்அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட படமாக  உருவாகி உள்ளது.  பிப்ரவரி 14 காதலர் தின ஸ்பெஷலாக இந்த படத்தின் ‘அரபிக் குத்து’ (Arabic kuthu) என்கிற பாடல் வெளியாகி ஹிட் அடித்தது.

இப்பாடலின் மிகப்பெரிய பிளஸ் என்றால் அது விஜய்யின் (Vijay) மெர்சலான நடனம் தான். ஸ்டைலிஷ் லுக்கில் அவர் போடும் துள்ளல் நடனத்தை ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்க்க, பாடலும் வைரல் ஆனது. பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய 'அரபிக்குத்து' பாடல் தற்போது வரை, 110 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

மேலும், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவு பெற்றுள்ள நிலையில், படத்தின் பின்னணி வேளைகள் தற்போது நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டை ஒட்டி இப்படத்தை வெளியிட உள்ளதாக படக்குழு அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

விஜய்யின் 66-வது படம்:

இந்நிலையில், விஜய்யின் 66-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்க உள்ளார். இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான தோழா படத்தை இயக்கிவர் ஆவார். மேலும் இப்படத்தை டோலிவுட்டை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார். இப்படம் மூலம் நடிகர் விஜய் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார். 

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போகும் நடிகை, தெலுங்கு உலகின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா என்பது தெரியவந்துள்ளது. இந்த திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக நடிகர் விஜய் நேரடியான தெலுங்கு படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...Vijay fans: பீஸ்ட் பாடலுக்கு கேரளாவில் இருக்கும்...விஜய் ரசிகர்கள் வெறித்தமான கொண்டாட்டம்... வைரல் வீடியோ..!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

தன்னுடைய திரையுலக கதாநாயகன் அஜித் குமாரை சந்தித்த நடிகர் சிம்பு!
பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!